தொலைக்காட்சி!!

Wednesday, July 12, 2017

யாழ். இளைஞர் திட்டமிட்ட படுகொலையா? கொழும்பு ஊடகம் தகவல்

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தத நிலையில், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்று என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், "உயிரிழந்த இளைஞரின் மார்பு பகுதியிலேயே குண்டு பாய்ந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக இரத்த போக்கே இளைஞர் உயிரிழக்க காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்ற லொறியின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பொலிஸார் குறிப்பிடுவதை போன்று தப்பிச்சென்ற லொறியின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் போது இளைஞரின் மார்பு பகுதியில் துப்பாக்கி சூடு படுவதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/151727?ref=rightsidebar

No comments:

Post a Comment