Friday, July 28, 2017

ரோபோக்களில் கற்பனை செய்யும் தொழில்நுட்பம்: அசத்த தயாராகும் கூகுள்!

முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
எனினும் இவ்வாறான ரோபோக்கள் மனிதனின் புரோகிராமிற்கு ஏற்ற வகையிலேயே செயற்பட முடியும்.
ஆனால் மனிதர்களின் உதவி இன்றி சுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்க கூகுள் நிறுவனம் முனைப்புக்காட்டி வருகின்றது.
DeepMind எனும் பெயரில் தயாராகும் இத் தொழில்நுட்பத்தினை உருவாக்குவதற்கு கூகுள் ஆய்வுகூடத்தில் குழு ஒன்று முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது.
கண்ணாடி கிளஸ் ஒன்றினை மேசையின் விளிம்பில் வைக்கும்போது அது விழக்கூடிய சாத்தியம் தொடர்பில் சிந்திப்பது போன்ற செயற்பாடுகளை இவ் வகை ரோபோக்கள் செய்யவல்லன.
எனினும் ரோபோக்களை உருவாக்கும் விதிமுறைகளிற்கு உட்பட்டு இத் தொழில்நுட்பத்தினை உருவாக்குவதற்கு சற்று சிரமப்படவேண்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/tech/03/129604

No comments:

Post a Comment