Monday, July 24, 2017

ஷூவில் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன? போக்கும் சிறந்த யோசனைகள்!!

ஷூவிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தை மிகவும் எளிதாக போக்கிட அற்புதமான சில டிப்ஸ்கள் இதோ,
ஷூவில் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?
ஷூவை நீண்ட நேரம் காலில் அணிந்து இருப்பதால், காலில் ஏற்படும் வியர்வைகள் ஷாக்ஸ் முழுவதையும் நனைத்து பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.
அந்த பாக்டீரியாக்கள் காலில் உள்ள இறந்த செல்களை உணவாக்கிக் கொள்வதால், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது காலுக்கு பொருந்தாத ஷூ, சாக்ஸ் அணிந்துக் கொள்வதாலும் துர்நாற்றம் ஏற்படும்.
காட்டன் சாக்ஸை தவிர, பாலிஸ்டர், நைலான், போன்றவற்றிலான சாக்ஸ்களை அணியக் கூடாது.
ஷூவில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?
  • பேக்கிங் சோடாவை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து அதனை ஷூக்களில் போட்டு வைத்தால் அவை ஷூவில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தாது.
  • 2 கப் வினிகருடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, அதில் ஷூவை நனைக்க வேண்டும். அதனால் ஷூவில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
  • பஞ்சை சிறிய பால் போல உருட்டி அதை ஆயிலில் நனைத்து, ஷூவின் உள்ளே நன்றாக துடைத்து, அதன் மேலே ஒரு பேப்பரை வைத்து மூடிவிட வேண்டும்.
  • ப்ளாக் டீ பேக்குகளை எடுத்து நன்றாக உலர்த்தி, அதை ஷூவின் உள்ளே போட்டு வைத்தால் போதும். ஷூக்களில் இருந்து எவ்வித துர்நாற்றமும் வராது.
  • இரவில் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, அதை ஷூக்குள் போட்டு வைத்து, காலையில் எடுத்து விடலாம். இதனால் அது பாக்டீரியாக்களை அழித்து, நாற்றத்தை உறிஞ்சிவிடும்.
  • ஆரஞ்சு பழத்தோலை ஷூவின் உள்ளே போட்டு வைத்தால், அது துர்நாற்றத்தை போக்கி, நல்ல நறுமணத்தை உண்டாக்கும்.
  • சாக்ஸ் அணிவதற்கு முன் காலின் பாதங்களில் பேபி பவுடரை தடவிக் கொண்டால், அது காலில் வியர்ப்பதை குறைத்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தாது.
http://news.lankasri.com/home-garden/03/129224

No comments:

Post a Comment