Monday, July 24, 2017

வடகொரிய மக்களின் வாழ்க்கை!!!

வடகொரியாவில் வாழும் மக்களின் நிலையை பிரான்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் முதன் முறையாக வெளிக் கொண்டுவந்துள்ளார்.
சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுவரும் வடகொரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஆறு முறை பிரான்சின் பிரபல புகைப்படக் கலைஞர் Eric Lafforgue பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதிக கட்டுப்பாடுகள் இருந்தும் அதை அனைத்தையும் கடந்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வடகொரிய மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக சூழல் குறித்து வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது.
வாகனங்களே இல்லாத நெடுஞ்சாலை, வெறிச்சோடிய சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் ஒரே ஒரு நபர், புத்தம் புதிய கார்களுக்கான விளம்பரங்கள் என அன்றாடம் வடகொரியாவில் அவர் கண்டுணர்ந்த அனைத்து விடயங்களையும் புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலையோர கடைகளிலும் சரி, எங்கும் மக்கள் கூட்டத்தை காணவே முடியவில்லை என பதிவு செய்துள்ள Eric Lafforgue, வாகனங்களே இல்லாததால் தலைநகரத்தில் பல எரிபொருள் நிலையங்கள் பூட்டிய நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.
சாலையின் பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் சோதனைச் சாவடி அமைத்து கடமையாற்றி வருவதாக கூறும் அவர், வாகனங்களே இல்லாத சாலையைக் கூட செப்பனிட்டு, அரசு அதிகாரிகள் குறைகூறும் வகையில் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக குறிப்பிடுகிறார்.
மட்டுமின்றி சாலையை செப்பனிடும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ இசைக் குழு ஒன்று இசை நிகழ்ச்சியையும் நடத்தி வந்ததை நினைவுகூறும் Eric Lafforgue, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் பிரச்சார படத்தில் மட்டுமே அங்குள்ள மக்கள் சிரித்த முகத்துடன் காணப்படுவதாக கூற கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவர்கள் எந்திர மனிதர்கள் அல்ல உண்மையிலேயே அங்குள்ள மக்களுக்கும் சிரிக்கத் தெரிகிறது என முடித்துள்ளார்.
http://news.lankasri.com/othercountries/03/129311?ref=right_featured

No comments:

Post a Comment