Thursday, July 20, 2017

வித்தியா கொலை! செயலிழந்திருந்த சுவிஸ்குமாரின் கைபேசி

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட தினம் சந்தேக நபரான சுவிஸ்குமார் எங்கிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. அவரது கையடக்கத் தொலைபேசி அன்று செயலிழந்து இருந்துள்ளது.
இவ்வாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார்.
அவரிடம் சுவிஸ்குமார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
சுவிஸ்குமார் சம்பவ தினத்தன்று எங்கு இருந்தார் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்தீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த போதே குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு கூறினார்.
சந்தேக நபர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட போது உடல் காணப்பட்ட கொடூரமான நிலையாகும்.
சடலம் காணப்பட்ட நிலைமை இன, மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் என உறுதியான சந்தேகம் ஏற்பட்டதை அடுத்தே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியத்தில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/community/01/152616

No comments:

Post a Comment