Friday, July 14, 2017

அனாதை இல்லத்தில் வளர்ந்தவர் இன்று கோடீஸ்வரி! சாதனை பெண்ணின் கதை!

கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற அமெரிக்கா நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் அளவுக்கு தொழில் செய்கிறது.
இதன் நிறுவனர் பெயர் ஜோதி ரெட்டி (47), இவர் இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் நரசிம்முல கூடம் என்ற கிராமத்தில் வெங்கட் ரெட்டி என்ற விவசாயிக்கு ஐந்து பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்தார்.
வெங்கட் ரெட்டியின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது, சாப்பாட்டுக்கே வழி இல்லாததால் ஜோதி அனாதை இல்லத்தில் 9 வயதில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தங்க இடமும், மூன்று வேளை சாப்பாடும் கிடைக்குமே என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு.
அம்மா இல்லை என்று பொய் சொல்லி தான் ஜோதி அங்கு தங்கினார்.
புழுக்கள் நெளியும் உணவு தான் அனாதை இல்லத்தில் அதிகம் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர் பிரச்சனையும் இருந்தது.
இதையெல்லாம் சமாளித்து ஜோதி அரசுப் பள்ளிக்கு சென்று படித்து வந்தார். கிழிந்த ஆடைகள் அணிந்திருந்தால் அவருக்குள் அது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.
எல்லாவற்றையும் மீறி ஜோதி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்தார்.
படிக்கும்போதே தையல், சலவை, துணி துவைத்தல், பாடம் கற்பித்தல் போன்றவற்றையும் அவர் பயின்றார்.
ஜோதிக்கு 16 வயது ஆன போது அவரது அம்மாவின் உறவினரான சாமி ரெட்டியுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர், ஜோதி 5 ரூபாய் தினக்கூலி வேலை செய்தார். இந்நிலையில் இரு குழந்தைகளுக்கு தாயானார் ஜோதி.
பிறகு 1989 காலகட்டத்தில் தேசிய சேவைத் தொண்டராக 190 ரூபாய் மதிப்பூதியத்துக்கு ஜோதி வேலை பார்த்தார்.
தனது படிப்பை தொடர விரும்பிய ஜோதி 1994ல் பி.ஏ பட்டத்தை பெற்றார், 1997ல் முதுகலைபட்டத்தையும் வெற்றிகரமாக முடித்தார்.
பட்டங்களை பெற்ற பின்னர் 400 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர் வேலை ஜோதிக்கு கிடைத்தது. வேலை பார்த்து கொண்டே சேலை வியாபாரமும் செய்து வந்த அவருக்கு ஒரு சேலைக்கு 20 ரூபாய் லாபம் கிடைத்தது.
பிறகு முதுகலை பட்டம் மூலம் அரசு ஆசிரியராக 6000 சம்பளத்தில் ஜோதிக்கு வேலை கிடைத்தது.
அந்த சமயத்தில் அமெரிக்காவிலிருந்து உயர் ரக கார், குளிர்கண்ணாடி என பெரிய அளவில் வாழும் ஜோதியின் உறவினர் அவரை காண வந்தார்.
அவரை பார்த்ததும் அமெரிக்காவுக்கு சென்று பணிபுரியும் கனவு ஜோதிக்கு ஏற்பட்டது. இதை செயல்படுத்த தொடங்கிய ஜோதி அமெரிக்காவில் பணிபுரிய தேவையான கணினி இயலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கடந்த 2000ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலம் அமெரிக்கா சென்றார் ஜோதி. அங்கு வீடியோ கடை, குழந்தைகள் பராமரிப்பு என பல வேலைகளை செய்தார்.
பிறகு, அமெரிக்காவுக்கு விசா தேவைப்படுபவர்களுக்காக ஒரு கன்சல்டிங் நிறுவனம் தொடங்கலாம் என்று அவருக்கு மனதில் உதித்தது.
இதையடுத்து தான் பல வேலைகள் செய்து சேமித்து வைத்த 40,000 அமெரிக்கா டொலர்களை வைத்து கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை ஜோதி தொடங்கினார்.
நான் எதிர்கொண்ட தடைகள் மூலமே இந்த உயர் நிலையை இன்று அடைந்திருக்கிறேன் - ஜோதி
வேலைக்கு ஆள் தருவது, மென்பொருள் தயாரிப்பு ஆகியவற்றில் ஜோதியின் நிறுவனம் இறங்கியது.
மெல்ல மெல்ல தொழிலை கற்று கொண்ட ஜோதி கடுமையாக உழைத்தார். அதன் பலனாக நிறுவனத்துக்கு முதலாண்டு 168,000 டொலர்கள் லாபம் கிடைத்தது. மூன்றாண்டுகள் கழித்து பத்துலட்சம் டொலர்களாகத் தாண்டியது.
இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்து கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் இன்று வருடத்துக்கு 15 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் அளவுக்கு தொழில் செய்கிறது.
நிறுவனத்தில் 100 பேர் தற்போது பணிபுரிகிறார்கள்.
வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஜெயித்த ஜோதியின் சுயசரிதை கடந்த 2013ல் தெலுங்கு மொழியில் எமெஸ்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/entrepreneur/03/128735

No comments:

Post a Comment