தொலைக்காட்சி!!

Wednesday, July 12, 2017

20 லட்சம் உயிர்களை காவு வாங்கிய வடகொரிய யுத்தம்: வெளியான திகில் புகைப்படங்கள்

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே உருவாகியுள்ள பதட்டமான சூழலில், கொரியா யுத்தத்தின் கோர முகங்கள் புகைப்படங்களாக மீண்டும் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் தற்போதைய ஆட்சியாளர் கிம் ஜோங் உன்னின் பாட்டனார் Kim Il-sung ஆட்சி காலத்தில் தென் கொரியா மீது இந்த யுத்தம் நடைபெற்றுள்ளது.
1950 யூன் மாதம் தொடங்கிய இந்த யுத்தமானது 1953 யூலை மாதம் முடிய நீண்ட 3 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. இதில் அப்பாவி மக்கள் 20 லட்சம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 103,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த யுத்தத்தில் வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் அப்போதைய சோவியத் ரஷ்யாவும் களமிறங்கியுள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படையை அனுப்பியுள்ளது. 5.7 மில்லியன் அமெரிக்க படைகள் போரில் பங்கேற்ற நிலையில் 36,000 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
நீண்ட 3 ஆண்டு காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் கோர முகங்களை தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் வெளிச்சமிட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
http://news.lankasri.com/othercountries/03/128561?ref=rightsidebar-tamilwin

No comments:

Post a Comment