Monday, June 19, 2017

மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளாக பிரிந்து கிடந்த ஜேர்மனியை ஒன்றாக இணைத்த பெருமைக்குரிய முன்னாள் சான்சலரான Helmut Kohl (87) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி வரலாற்றில் மைய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவரான Helmut Kohl தான் சான்சலராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் ஆவார்.
1982 முதல் 1998-ம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சான்சலராக பதவி வகித்துள்ளார்.
இவரது ஆட்சி காலத்தில் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை ஒன்றாக இணைத்து தற்போதையை ஜேர்மனியை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.
இதுமட்டுமில்லாமல், அப்போதையை பிரான்ஸ் அதிபரான Francois Mitterrand உடன் இணைந்து ஐரோப்பாவில் யூரோ நாணயத்தை அறிமுகப்படுத்தியதும் இவர் தான்.
பிரித்தானிய பிரதமர் மார்க்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியவர்களுடன் நெருங்கிய நட்புக்கொண்டு ஜேர்மனியை பலமிக்க நாடாக மாற்ற பெரிதும் உதவியுள்ளார்.
வினோதமான தோல் நோயால் அவதியுற்ற வந்த இவரது மனைவி 2001-ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
2008-ம் ஆண்டு மாடியில் இருந்து இவர் கீழே விழுந்ததை தொடர்ந்து சக்கர நாற்காலியில் மட்டுமே இதுவரை வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், Ludwigshafen நகரில் உள்ள அவரது குடியிருப்பில் நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது மரணம் ஒரு தாங்க முடியாத இழப்பு என தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஐ.நா அலுவலகங்களில் உள்ள கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட்டு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/germany/03/127181?ref=right_related

No comments:

Post a Comment