தொலைக்காட்சி!!

Sunday, June 4, 2017

அமானுஷ்ய இணையத்தளத்திற்கு ஓர் அழைப்பு! கூறப்படும் செய்தி என்ன?


நம்மை அறியாமல் பல விடயங்கள் உலகில் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒன்று அதன் செய்திகள் எம்மை வந்து அடைவதில் தாமதங்கள் ஏற்படலாம்.
அல்லது அவ்வாறு ஓர் செய்தி கிடைத்தாலும் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் எவரும் ஆய்வு செய்வதும் இல்லை.
தற்போதைய நவீன உலகில் இணையம் மூலமாகவே புதுக் கோட்பாடுகளும், கருத்துப்பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன என்பதனை மறுக்க முடியாது.
அந்தவகையில் உலகில் கணக்கற்ற இணையத்தளங்கள் உள்ளன அவற்றில் பல புரியாத புதிராக இருக்கின்றன. அவ்வாறான ஓர் தளமே http://www.973-eht-namuh-973.com (இங்கே அழுத்துவதன் மூலம் தளத்தினை பார்வையிடலாம்)
இந்தத் தளத்தினை உருவாக்கியவர் யார்? என்பது குறித்த செய்திகள் இல்லை (வெளியிடப்படவில்லை). ஆனால் ஒரு மனநோயாளி, அல்லது அதிபுத்திசாலி இதனை உருவாக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்தத் தளத்தில் புரியாத சொற்களும், இலக்கங்களும் கணக்குகளும் காணப்படுகின்றன. அதன் மூலம் என்ன சொல்லப்படுகின்றது என்பது தொடர்பில் விளக்கம் இல்லை.
அத்தோடு அமானுஷ்ய படங்களும் இந்தத் தளத்தில் காணப்படுவதோடு. பிரபஞ்சம் கடவுள் தொடர்பிலாக வார்த்தைகளும் காணப்படுகின்றன.
இதனை உருவாக்கியவர் ஓர் செய்தியினை உலகுக்கு சொல்ல வருகின்றார், ஆனாலும் அந்த செய்தியினை எம்மால் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பகவத் கீதையை மேற்கோள் காட்டியும், தொழில் நுட்பம் சார்ந்த அறிவுகொண்டும் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக அவர் மனநோயாளி அல்ல எனவும், ஓர் புது மதக்கோட்பாடு சார்ந்த தளமாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
ஒரு சில ஆய்வாளர்கள் சாதாரண மனித அறிவுக்கு எட்டாத வகையில் the holographic universe பற்றி தெளிவு படுத்தும் ஓர் தளம் இது எனவும் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்தத் தளம் எண்களே மதங்களை உருவாக்குகின்றது என்பதோடு ஓர் புது மதக் கொள்கையை பரப்ப உருவாக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
என்றாலும் அவரவர் அறிவை பரீட்சித்துக் கொள்ள இந்தத் தளம் சற்றே உதவி செய்யலாம்.
http://www.tamilwin.com/science/01/147969

No comments:

Post a Comment