தொலைக்காட்சி!!

Thursday, June 8, 2017

பிரித்தானியா பொதுத்தேர்தல்: வாக்குசாவடியில் ருசிகர நிகழ்வு!

பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.
பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.
வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள் தங்களுடைய நாய்களையும் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்குள் சென்றபோது, நாய்களை வாக்குசாவடிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
நாய்களும் தங்களுடைய எஜமான்கள் வரும் வரை மிகவும் பொறுமையாக காத்திருந்துள்ளது, இப்படி ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது.
#DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலாகியுள்ளது.
 • June 08, 2017
 • 11 minutes ago
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட வரும் போது தங்களுடன் நாய், குதிரை போன்ற செல்ல பிராணிகளை உடன் அழைத்து வந்துள்ளனர்.
அதில் ஒரு பெண் தான் ஒட்டுப் போட வரும் போது, தன்னுடைய செல்லப் பிராணியான guinea pig-ஐ உடன் அழைத்து வந்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • June 08, 2017
 • 12 minutes ago
பிரித்தானியாவில் ஊடக, சமூக வலைதளங்களில் பிரபலமான 22 பேர் ஜெரமி கோர்பினையும் 4 பேர் மட்டும் பிரதமர் தெரேசா மேவையும் ஆதரித்து வாக்களித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
 • June 08, 2017
 • 5 hours ago
West Belfast தொகுதியில் போட்டியிடும் Alliance party வேட்பாளர் Sorcha Eastwood புதிதான திருமணம் செய்து கொண்ட தனது கணவர் Dale Shirlow - வுடன் வந்து வாக்களித்துள்ளார். வாக்களிக்க வரும்போது இவர்கள் இருவரும் திருமண ஆடையில் வந்துள்ளனர்.
 • June 08, 2017
 • 6 hours ago
ஒவ்வொரு வாக்குசாவடிக்கு வெளியே நின்ற நாய்களின் புகைப்படங்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களின் புகைப்படங்களை விட வைரலாகியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு
 • June 08, 2017
 • 6 hours ago
லண்டன் தாக்குதலின் போது ஹீரோவாக செயல்பட்ட Geoff Ho தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எதிர்பாராதவிதமாக இன்று என்னால் வாக்களிக்க முடியவில்லை, உங்கள் அனைவரையும் வாக்களிப்பதற்காக ஊக்கப்படுத்துகிறேன், மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! நன்றி என பதிவிட்டுள்ளார்.
 • June 08, 2017
 • 6 hours ago
மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பிரித்தானியா மக்கள்
 • June 08, 2017
 • 6 hours ago
LibDem தலைவரான Tim Farron-யை படமெடுக்க முயன்ற போது புகைப்பட நிருபர்களுக்கும், கமெராமேன்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 • June 08, 2017
 • 8 hours ago
பிரித்தானியாவை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் NHS எனப்படும் தேசிய சுகாதார சேவையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு
 • June 08, 2017
 • 9 hours ago
பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த ஜெரமி கோர்பின், இங்கு வந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி, இன்று ஜனநாயக நாள், நான் வாக்களித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
Frank Augstein/AP
 • June 08, 2017
 • 10 hours ago
தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் தெரெசா மே
Alastair Grant/AP
 • June 08, 2017
 • 10 hours ago
ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் SNP தலைவர் Nicola Sturgeon தனது வாக்கினை பதிவு செய்தார்.
 • June 08, 2017
 • 10 hours ago
 • June 08, 2017
 • 11 hours ago
நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் பொதுமக்கள்
Amer Ghazzal/REX/Shutterstock
 • June 08, 2017
 • 11 hours ago
 • June 08, 2017
 • 12 hours ago
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு கூகுள் டூடூல் மூலம் கௌரவப்படுத்தியுள்ளது.
 • June 08, 2017
 • 12 hours ago
தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபராக இருப்பின் உங்களுக்கென்று குறிப்பிட்டுள்ள Polling Stations-ல் வாக்களிக்க வேண்டும், இதுபற்றிய மேலதிக தகவல்களை https://www.yourvotematters.co.uk/இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
 • June 08, 2017
 • 12 hours ago
பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment