தொலைக்காட்சி!!

Sunday, June 11, 2017

மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல்!

நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மாலை வேளை மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாதகமான அறிகுறிகள் காணப்படுகின்றது.
எனவே மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் அவதானமாக இருக்கும்படி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
காலநிலை குறித்து அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,கடந்த நாட்களில் மழை வீழ்ச்சி அதிகமாக பதிவாகியிருந்தது போன்று இல்லாமல் மழைவீழ்ச்சி சற்று குறைவடைந்திருந்தாலும் தொடர்ந்தும் மழைவீழ்ச்சி பதிவாகும்.
இருப்பினும் காற்றின் வேகம் வழமை போன்றே நிலவக்கூடும்.
மேல் மாகாணம் உவா, மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அதேவேளை சிறிதளவில் மழைவீழ்ச்சியும் பதிவாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றது.
அதனால் கரையோர பிரதேசங்களில் வாழும் மீனவக் குடும்பங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/weather/01/148743

No comments:

Post a Comment