தொலைக்காட்சி!!

Friday, June 9, 2017

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கிடைக்கவுள்ள வரபிரசாதங்கள்!

வெளிநாட்டவர்கள் இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வைப்பு கணக்குக்கு விசேட வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க டொலர், பவுண்ட், சுவிஸ் பிராங், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பானிய யென், கனேடிய டொலர் போன்ற நாணயங்களில் இந்தக்கணக்குகளை திறக்க முடியும்.
ஏனைய நாணயங்களில் கணக்குகளை திறப்பதற்கு அதிகாரிகள் ஒப்புதலை வழங்க வேண்டும்.
இதேவேளை இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டுள்ள வெளிநாட்டவர்களின் மனைவிமாருக்கு இலங்கையில் தங்குமிட விசாவை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை தவிர குறித்த வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் கணக்கில் 300,000 டொலர்கள் வைப்பு செய்யப்பட்டால், அவர்களும் இலங்கையில் குறித்த கணக்கின் கால அளவின் அடிப்படையில் இலங்கையில் தங்கியிருக்க முடியும் என்று அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது
இதற்கிடையில் குறித்த கணக்குகளுக்கு நாணய மாற்று கட்டுப்பாட்டு சட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/business/01/148488

No comments:

Post a Comment