தொலைக்காட்சி!!

Tuesday, June 20, 2017

துடுப்பாட்டத்தில் மாத்திரமா பாகிஸ்தான் இந்தியாவை வென்றது!!!கலாச்சாரமீறல்களில்....

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதன்முறையாக கிண்ணத்தை வென்றது.
முதன் முதலாக இது பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்பதால் அந்நாட்டு ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அதுவும் தாங்கள் பரம எதிரியாக கருதும் இந்தியாவை தோற்கடித்துவிட்டதால் விண்ணை தொடும் அளவுக்கு சந்தோஷத்தில் பறந்துகொண்டிருக்கிறார்கள்.
அதிலும், லண்டன் ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அழகிகள் சிலர் செய்த ஆர்ப்பாட்டம் டிரெண்டாகியுள்ளது, பாகிஸ்தானில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன, ஆனால் அவற்றையெல்லாம் மீறி லண்டன் ஓவல் மைதானத்தையே தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர் இந்த அழகிகள்.
அதிலும், தங்கள் நாட்டின் போட்டியினை ரசிக்க சென்ற இந்திய ஆண்களை க்ளீன் போல்டாக்கியுள்ளனர், தங்கள் நாட்டின் கொடியினை தங்கள் கன்னங்களில் வரைந்து கொண்டு துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டுள்ளனர்.
அனைவரின் இதயங்களை வென்ற பெண்கள் என்று இந்த அழகிகளின் புகைப்படங்கள் டிரெண்டாகியுள்ளது.
http://news.lankasri.com/cricket/03/127332?ref=lankasritop

No comments:

Post a Comment