Monday, June 5, 2017

சர்வதேச அளவில் இன்று முக்கிய தினம்: என்ன தெரியுமா...?

நாம் வாழும் இந்த பூமி அழிவதற்கு மூன்று வழிகள் மட்டுமே இருக்கிறது.
ஒன்று புவி வெப்பமாகுதல்(climate change), இரண்டாது அணு ஆயுதப் போர், மூன்றாவது எரிக்கல் பூமியை தாக்குவது.
துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால் முதல் இரண்டு சம்பங்கள் இந்த நிமிஷம் நம் கண் முன் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிகமாக மழை பெய்வதும், அதிகமாக வெயில் அடித்தாலும் அது பருவநிலை மாற்றத்தின் விளைவு தான்.
பருவநிலை மாற்றம் பற்றி வருடக்கணக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு வந்தால் கூட உலக நாடுகள் இதில் அதிக அக்கறை செலுத்துவது போல் தெரியவில்லை.
சர்வதேசளவில் கார்பன் வாயுவை வெளியிடுவதில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.
சீனா, இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 194 நாடுகள் பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க போறதாக அறிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டு தொழிற்சாலைகள் முடங்க கூடாது என டொனால்ட் டிரம்ப் தீர்மானித்ததால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
பருவநிலை மாற்றத்தை தடுக்க வில்லை ல் 400 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் பூமியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்திருக்கிறதை உலக நாடுகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
இரண்டாவது, அணு ஆயுதப் போர். சர்வதேச நிகழ்வுகளை கவனித்தால் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுப்பதையும் நாடுகளுக்குள் பகைமையை ஏற்படுத்தி யுத்தங்களுக்கு வழிவகுப்பதையும் உலக நாடுகள் நிறுத்த போவதில்லை என்றே தோன்றுகிறது.
ஒரு வல்லரசு நாட்டை மிரட்ட இன்னொரு வல்லரசு நாடு அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது.
குட்டி நாடுகளை ஆயுதங்களை காட்டியே மிரட்டி அடிப்பணிய வைக்கிறது. இல்லையெனில், ஆயிரம் காரணங்களை கூறி அந்த நாட்டு மீது போர் தொடுத்து அப்பாவி மக்களை கொல்கிறார்கள்.
இதற்கு மேற்கு ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உதாரணம். அணு ஆயுத யுத்தத்தால் உலகம் அழியும் எனில் அது இங்கிருந்து தான் தொடங்கும்.
ஆனால் திறமையான, மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் கிடைத்தால் இந்த அழிவையும் நாம் தடுக்கலாம்.
மூன்றாவது தான் இப்போதைக்கு நம் கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்த 50 வருடத்திற்குள் பூமியை எரிக்கல் தாக்கினால் அதை தடுக்கும் விஞ்ஞானம் நம் கையில் இல்லை. டைனோசர்கள் அழிந்த மாதிரி நாமும் அழிய வேண்டியது தான்.
ஆனாலும் எதிர்காலத்தில் பூமியை தாக்க வரும் எரிக்கல்லை தடுக்கவும், சுக்கு நூறாக சிதற வைக்கவும், எரிக்கல்லை திசை திருப்பி பூமியை தாக்காமல் திருப்பி அனுப்பவும் அல்லது எரிக்கல்லின் வேகத்தை குறைத்து கடலில் விழ வைத்து பெரும் சேதத்தை தடுக்கவும் வழிகள் இருக்கிறதாக விஞ்ஞானிகள் நமக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அடுத்த 50 வருஷங்களுக்கு இது சாத்தியமில்லை.
எரிக்கல்லை தடுக்க வேண்டியது விஞ்ஞானிகளின் வேலை. ஆனால் புவி வெப்பமாவதையும், அணு ஆயுதப் போரையும் தடுப்பது உலகத் தலைவர்களின் வேலை. பூமியை காப்பதும் அழிப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
இன்று தான் அந்த முக்கிய தினம். சர்வதேச சுற்றுச்சூழல் தினம்.


http://news.lankasri.com/othercountries/03/126488?ref=morenews

No comments:

Post a Comment