தொலைக்காட்சி!!

Tuesday, June 27, 2017

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு சிறப்பு அறிவிப்பு

பிரித்தானியாவில் வசிக்கும் 3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் “குடியேற்ற நிலைமை” தொடர்பான சிறப்பு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட்டிற்கு பின்னர் தமது எதிர்கால உரிமைகளுக்காக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அடையாள அட்டை சட்டத்திற்கு தேவைப்படுவதாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு, தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அல்லது பொது சேவைகளை மேற்கொள்ளும் போது உறுதி செய்து கொள்வதற்காக இந்த அடையாள அட்டை தேவைப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் திட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டும் 20 பக்கங்களை கொண்ட ஆவணம் தயாரிக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் இருந்தவர்களுக்கான புதிய “குடியேற்ற நிலை” தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்கனவே அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய சட்டத்தின் படி தங்கள் குடியேற்ற நிலைமையை காட்டும் ஆவணங்கள் பெற வேண்டியது கட்டயமாக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு ஆவணமின்றி, தற்போதைய குடியிருப்பாளர்கள் தொழிலாளர் சந்தை மற்றும் சேவைகளை அணுக கடினமான நிலை ஏற்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/uk/01/150276?ref=rightsidebar

No comments:

Post a Comment