Saturday, June 24, 2017

எனக்கு இரு மனைவியா?? உச்ச கோபமடைந்த பிரபாகரன்!! யாரும் அறியா உண்மைகள்...

என்னது தமிழீழத் தேசியத் தலைவருக்கு இரண்டு மனைவியா? - உண்மைச் சம்பவம்..
ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற தமிழீழத் தேசியத் தலைவர்..
அடேய் ...நீ மட்டும் கையில மாட்டனும், உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று இப்போது பலரும் யோசிப்பீங்க..
இப்பவே வந்து ஒரு கை பார்ப்போமே எனவும் யோசிப்பீங்க..பொறுமை..... பொறுமை..
2002ம் ஆண்டின் பிற் பகுதியில்,
கவிஞர் அறிவுமதியின் வரிகளில், பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் குரலில் ஒரு அழகான பாடல் வெளி வந்தது.
“எங்கள் தலைவன் பிரபாகரன் - அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்..
இது தான் அந்தப் பாடல்..
இந்தப் பாடல் ஒளி முகம் தோறும் புலி முகம் இறுவட்டுக்காக இடம் பெற்றது. இந்தப் பாடல் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் காதுகளிற்கும் எட்டியது. இந்தப் பாடலின் உள்ளார்ந்த அர்த்தம் புரியாது யார் இப் பாடலை மேலோட்டமாக கேட்பினும் நிச்சயமாக ஒரு தவறான புரிதலுக்கே வருவார்கள். பாடலைக் கேட்ட தலைவரோ..
கவிஞர் அறிவுமதி மீது கடுப்பானார். என்னது என்னை இவன் முருகனுடன் ஒப்பிடுவதா? எனக்கு இரண்டு மனைவியா? இனிமேல் அறிவுமதி பாட்டெழுதவே கூடாது” இப்படி ஒரு உத்தரவு தலைவரிடமிருந்து கிடைக்கும் என கவிஞர் அறிவுமதி நினைத்திருக்கவே மாட்டார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் வீரத்தினை, முருகனின் வீரத்திற்கு நிகராக ஒப்பிட்டு எழுதப்பட்ட பாடல் அது. சிறிது காலம் கவிஞர் அறிவுமதி அவர்களும் ஓய்ந்திருந்தார். ஆனாலும் தலைவரின் மனதை வெல்ல வேண்டும், எப்படியும் இந்தப் பாடல் ஒரு தவறான நோக்கில் எழுதப்பட்டது அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருந்தார். வெற்றியும் கண்டார்.
அடுத்து ஒரு இறுவட்டு, இறுவட்டு வேலைகள் யாவும் வெளியே தெரியா வண்ணம் தமிழகத்தில் இடம் பெற்றது. அது தான் அன்னைத் தமிழ்...
அதில் ஒரு பாடலை எழுதினார்
“உன்னை புகழ்ந்தால் உனக்கு என்னை பிடிக்காது
உன்னை மறந்தால் என் இதயம் என் இதயம் துடிக்காது
என்னடா செய்யச் சொல்கிறாய்? என்னை
ஏனடா இப்படிக் கொல்கிறாய்
ஔவை பாராட்டவில்லையா - அதை கேட்டு
அதியமான் உயிர் நீட்டும் நெல்லியை
உவகையில் ஈட்டவில்லையா?
அதனால்...அதனால்..
அழகு தமிழில் உன்னை அறிவுமதி பாட அனுமதி
தலைவா.....தலைவா....தலைவா...
இந்த இறுவட்டின் ஒலிப்பதிவு யாவும் நிறைவு பெற்ற பின்னர், கலை பண்பாட்டு கழகத்தினர் ஊடாக தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. பாடல்களை கேட்டதும் தலைவருக்கு ஆச்சரியம். ஆம் அன்னைத் தமிழ் இறுவட்டின் அத்தனை பாடல்களும், மிகவும் இனிமையாக வந்திருந்தன...அறிவுமதியை தொடர்ந்தும் எழுதச் சொல்லுங்கள் என்றார் அண்ணர்.
இப்படி தமிழகத்தின் புகழ் பூத்த பெரும் பாடகர்கள், கவிஞர்கள் எனப் பலரும் ஈழத்திற்காக ஒவ்வொரு பாடல்களைப் பாடியுள்ளார். ஆம்... மீட்டிப் பார்ப்போமா?
தமிழீழத்தின் முதலாவது எழுச்சிப் பாடல் இறுவட்டு எனச் சிறப்பிக்கப்படும் “களத்தில் கேட்கும் கானங்கள்” இறுவட்டின் அத்தனை பாடல்களையும் பாடிய பெருமைக்குரியவர்கள் தமிழக கலைஞர்களே...
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில், வேதம் புதிது திரைப்படப் புகழ் தேவேந்திரனின் இன்னிசையில், உருவான களத்தில் கேட்கும் கானங்கள் இறுவட்டில் எமக்காக எம் தமிழகத்தின் பெரும் கலைஞர்கள் பாடிய பாடல்கள் இதோ...
🎼🎼பாடகர் டி.எம் சௌந்தர்ராஜன் - நடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாரடா...
இன்று வரை பல துரோகிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் பாடலாக உள்ள இந்தப் பாடலை ஆம் பாடகர் சௌந்தர்ராஜன் அவர்கள் தன் கணீர் குரலால் பாடியுள்ளார்.
🎼🎼பழம் பெரும் பாடகி பி.சுசீலா அவர்கள்..- கண்மணியே கண்ணுறங்கு எனும் பாடல்...என்ன ஆச்சரியமளிக்கிறதா?
இன்னும் பல பாடல்கள் மக்களே...
🎼எம்/.எஸ் ராஜேஸ்வரி - இவரும் ஓர் பழம் பெரும் பாடகி , மழலைக் குரலால் அழகாக பாடுவார், காகங்களே..காகங்களே காட்டுக்கு போறியளா? எனும் அழகிய பாடல்...
🎼 வாணி ஜெயராம் - தன் அழகிய குரலால் இவர் பாடிய
வீசும் காற்றே தூது செல்லு - தமிழ்
நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு..”
இந்தப் பாடலை கேட்ட ஒவ்வொரு தமிழனும் உண்மையிலே கண்ணீர் சிந்தினான் அல்லவா?
அப்படியானால் பாடலைப் பாடிய பாடகி வாணிஜெயராமின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?
பாடலைப் பாடி முடித்த பின் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தாராம். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்.
இது போல இவர் பாடிய மற்றுமோர் பாடல்
“வீரன் மண்ணில் புதையும் போது..” மாவீரர் பெருமை சொல்லும் ஓர் பாடல்..
🎼 பாடகர் மனோ அவர்கள்... தேவேந்திரனின் இசையில் ஆரம்பித்து, நமது இளைய இசைப் புயல் இசைப் பிரியனின் இசை வரை பாடகர் மனோ அவர்கள் பாடகள் பாடியுள்ளார்.
களத்தில் கேடும் கானங்கள் இறுவட்டிற்காக இடம் பெற்ற “தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் பாடல்...
எவராலும் எளிதில் மறக்க இயலாத பாடல்..
இப் பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து வாணி ஜெயராம் அவர்கள் பாடியுள்ளார்.
இதே போல் லண்டன் ஐபிசி தமிழ் வானொலியின் பத்தாவது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட உறவொலி எனும் இறுவட்டில், இசைப் பிரியனின் இன்னிசையில் மனோ அவர்கள் பாடிய “எங்கள் வானொலி..இது உங்கள் வானொலி..: எனும் பாடலும் குறிப்பிடத் தக்கதாகும்.
🎼 பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்..
இவர் புயலடித்த தேசம் இறுவட்டிற்காக, சின்னக் குயில் சித்திராவுடன் இணைந்து பூகம்பத்தின் வேகத்திலே பூமி பட்ட பாட்டைப் பாரு காளைகளே எனும் பாடலைப் பாடியுள்ளார்.
அதே போல், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய இன்னும் 2 மிகப் பிரபலமான பாடல்கள் உள்ளன. அவை தான் எல்லாளன் இறுவட்டிற்காக இடம் பெற்ற பாடல்கள்..
ஒன்று கவிஞர் யோ. புரட்சியின் வரிகளில் உருவான பாடல்..அள்ளித் தின்று “அ” எழுதிய அன்னை மண்ணைப் பிரிகிறோம் எனும் பாடலாகும்...
மற்றைய பாடல்..தாயக மண்ணே..அவரது கணீர் குரலில் கேட்டாலே உளத்தில் உரமேறும் ஓர் பாடல் எனலாம்.
பாடகர், ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், திப்பு, கார்த்திக், கோவை கமலா , நித்தியஸ்ரீ மகாதேவன், அனுராதா ஸ்ரீராம், ஓ.எஸ்.அருண், சைந்தவி, மன்மதராசா புகழ் மாலதி, கல்பனா, உன்னி மேனன்,
T.L. மகாராஜன், சுஜாதா, எஸ்.என் சுரேந்தர் எனப் பல பாடகர்கள் பாடியுள்ளார்கள், அத்துடன் கவிப் பேரரசு வைரமுத்து அவர்களும் வீழ மாட்டோம் எனும் பாடல் இறுவட்டிற்காக பாடல் எழுதியுள்ளார்.
இந்த விபரங்களுடன் மற்றுமோர் பதிவில் சந்திக்கிறேன்...
இசைப் பாடல் விபரங்கள் இன்னும் வளரும்...
பிற் சேர்க்கை : பதிவினை முழுமையாகப் படிக்காது இங்கே பகிரப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.
http://www.jvpnews.com/srilanka/04/129341

No comments:

Post a Comment