தொலைக்காட்சி!!

Tuesday, June 20, 2017

அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு நிரந்தர வதிவிட அங்கீகாரம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு நிரந்தர வதிவிட அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியா Kalgoorlie பகுதியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பணி புரிந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர், மேற்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கும் பணிபுரிவதற்குமான உரிமையை பெற்றுள்ளார்.
குறித்த இலங்கையர் நாடு கடத்தப்படவிருந்த நிலையில், அவுஸ்திரேலிய மத்திய அமைச்சர் தலையீடு செய்தமையால் நாடு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்ட பின்னர், 60 வயதுடைய எட்வின் அசரியாஸ் (Edwin Asariyas) நாடு கடத்துதலை எதிர்கொண்டார்.
நிரந்தர வதிவாளராகுவதற்கான மூன்று முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மே 12ஆம் திகதியில் இருந்து அவருக்கு அந்த நாட்டில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றையதினம் நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் குடிவரவு அதிகாரிகளுக்கு அவர் தனது விமான பயண சீட்டுக்களை நிரூபிக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு உதவி அமைச்சர் தலையிட்டு, அவருக்கு நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டில் 457 விசாவில் நியூசிலாந்தில் இருந்து Kalgoorlie சென்ற அசரியாஸ் பிரெஸ்டீஜ் யுனிவர்சல் சுரங்க குழாய்கள் தொடர்பான பணியை மேற்கொண்டுள்ளார்.
ஆசாரியஸின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இன்னமும் இலங்கையின், கொழும்பில் வசிக்கின்றனர். ஆனால் அவர் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவரது மகள் படிப்பை தொடர முடியாமல் போயிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது

No comments:

Post a Comment