Friday, June 2, 2017

சோக மயமான வவுனியா!! மகனை பலி கொடுத்து கதறி அழும் தந்தை.... வீதி எங்கும் மாணவர்கள்....

வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று முன்தினம் (31) தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் (17) இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் இன்று (02) இடம்பெற்று வருகின்றது.
இறந்த மாணவனின் தந்தையான எஸ். தர்மராசா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த எனது மகனை பல மாணவர்கள் பார்த்திருக்க அவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அடித்ததால் மனமுடைந்த எனது மகன் கிருமிநாசினையை அருந்தி உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் சிரமதானம் செய்துகொண்டிருந்தபோது எனது மகனுக்கும் இன்னொரு மாணவனுக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகவே ஆசிரியர் எனது மகனை மாத்திரம் குறிவைத்து தாக்கியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்றைய தினம் வீட்டுக்கு வந்த எனது மகன் எவருடனும் கதைக்கவில்லை சாப்பிட்டு விட்டு பாடசாலை உடையை கழுவுவதற்கு சென்ற வேளையில் பாடசாலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்த காரணத்தினால் தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த கிருமி நாசினியை தேடி எடுத்து அருந்தியுள்ளார்.
காலையில் 9.00 மணிக்கு பாடசாலையில் நடைபெற்ற சம்பவம் எனது மகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
எங்கள் கிராமமான கனகராயன் குளத்தைச்சேர்ந்த மக்கள் இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்திருந்தோம். யுத்ததம் நடைபெற்ற காலங்களில் பதுங்குகுளிகளில் வைத்து காப்பாற்றி கொண்டு வந்த எனது மகனை அநியாயமாக பலிகொடுத்துவிட்டேன்.
இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நாங்கள் கூலி வேலைசெய்யும் ஏழை விவசாயிகள் எனது மகனுக்கு நடந்த சோகம் இன்னொரு மாணவனுக்கு ஏற்படக் கூடாது. எமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புபுகிறோம். இன்று ஆசிரியர்களே எமது குழந்தைகளுக்கு எமனாக மாறியுள்ளனர்.
எனது மகனின் மரணத்தை பாடசாலை சமூகம் மறைப்பதாலோ அல்லது நீர்த்துபோகச் செய்வதாலோ மாணவ சமூகத்துக்கு நீதி கிடைக்க போவதில்லை என தெரிவித்தார்.
மாணவர்கள் அஞ்சலி
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் முன்பாக ஆசிரியர் தாக்கியதால் மனமுடைந்த உயர்தரம் படித்து வரும் பாடசாலை மாணவன் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சக மாணவர்களும், உறவினர்களும் தெரிவித்தனர்.
மாணவன் கல்விகற்ற பாடசாலையில் கறுப்புகொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு இரங்கல் தெரிவித்து பதாதைகள் கட்டப்பட்டுள்ளது.
மாணவனின் இறுதி அஞ்சலி நிகழ்விற்காக மாணவர்கள் பாடசாலையிலிருந்து வகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கருத்து கேட்டபோது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார்.
குறித்த மாணவனின் சாவுக்கு காரணம் என சந்தேகிக்கப்படும் ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/04/127882

No comments:

Post a Comment