தொலைக்காட்சி!!

Saturday, June 10, 2017

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்................!


தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்................! #June_ஆரம்பம் ....
இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! 
1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)
2) அங்கு இருந்து "toilet tissu" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)
3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)
4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).
5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)
7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).
8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
#நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க
9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!
10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.
தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்.....
(Copied)


உண்மைதான்!இலங்கையில் உள்ள சில பல பழக்கங்களை(styles )பார்த்துத்தான் அமரிக்காவில் திரில்லர் படம்,ரொமான்ஸ் படமெல்லாம் எடுக்கிறார்கள்!இதைப்புரியாமல் இங்க வேலை வேலை .....இன்னும் வேலை என்றே சுத்தம் செய்யவும்,லீட்ஸ் உரிக்கவும் சமைக்கவும்,வான்,லாரி ஓட்டவும் (பேப்பர் போடுறதை மறந்திட்டேனே)செய்து கொண்டு அங்கு கட்டை,குட்டை காற்சட்டை (அன்று இந்திய இலங்கை போலீசுக்கு அடிமைகள் என்ற அடையாளமாக வெள்ளையன் போட்டுவிட்டதுதானே)போட்டுக்கொண்டு கூலரும் அணிந்திட்டால் சரியா?முதலில் இன்று இலங்கை என்பதை படிக்கணும்(update).அதற்கு ஏற்றவாறு நடிக்கணும்!பழைய style பல படங்களில் பார்த்தாயிற்று!போதும்!

No comments:

Post a Comment