தொலைக்காட்சி!!

Tuesday, June 20, 2017

வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 10 பூமிகள்! நாசா வெளியிட்டுள்ள புதுத்தகவல்

பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் பிரபஞ்சத்தில் உள்ளதாக நாசா கண்டுபிடித்துள்ளது.
நேற்றைய தினம் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 19ஆம் திகதி வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய அறிக்கையை வெளியிடுவதாக நாசா முன்னரே அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்தப் புதுத் தகவலை நாசா கூறியுள்ளது.
219 கிரகங்களை உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாகவும் நாசா பட்டியல் படுத்தியுள்ளது.
இப்போது கண்டு பிடிக்கப்பட்ட 10 கிரகங்களும் பூமியைப் போன்றே தட்ப வெப்ப நிலையினையும், பூமியின் அளவை ஒத்தனவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தான் உயிர்கள் வாழக்கூடிய கிரகமா? மனிதர்கள் தனித்து உள்ளார்களா? என்ற ஆய்வு தொடரப்பட்டது.
அதன் அடிப்படையில் இது வரையிலும் 4034 கிரகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. அவற்றினில் 50 கிரகங்கள் பூமிக்கு ஒத்தனவாக அமைந்துள்ளதாக கணிப்பீடு செய்யப்பட்டது.
குறித்த 50 கிரகங்களில், 10 கிரகங்கள் பூமியைப் போன்றே சூரியனைச் சுற்றி வருகின்றன எனவும், இங்கு தண்ணீரும் இருக்கக் கூடும் சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் தற்போது நாசா தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதனை உறுதி செய்யும் வகையிலேயே இந்த அறிக்கையை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/science/01/149639

No comments:

Post a Comment