தொலைக்காட்சி!!

Saturday, May 13, 2017

அவுஸ்திரேலியா செல்லும் அனைவருக்குமான அறிவித்தல்....!

அவுஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 வரவு செலவு திட்டத்தின் மூலம் வீசா கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சுற்றுலா, மாணவர்கள் மற்றும் தொழில் உட்பட அனைத்து பிரிவுகளிலும் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விசா கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய விசா கட்டணம் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/australia/01/145555?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment