தொலைக்காட்சி!!

Saturday, May 6, 2017

கேள்விக்குறியாகும் மனிதாபிமானம்! மரணத்திற்காக அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

பாழடைந்த அறையொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்லேவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின் பக்கத்தில் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையிலிருந்து குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.
57 வயதுடைய சுகயீனமடைந்த செனவிரத்ன மெனிக்கே என்ற திருமணம் செய்யாத பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்லேவெல பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாரின் உதவியின் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 உடன்பிறப்புக்கள் இருந்த போதிலும், கவனிப்பாரற்ற நிலையில் பாழடைந்த அறையில் குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மரணிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கல்லேவெல பிரதேச செயலாளர் எம்.யு.நிஷாந்தவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அவர் பொலிஸாருடன் சென்று குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இதன்போது வீட்டின் பின்னால் உள்ள பழைய பொருட்கள் வைக்கும் இடத்தில் காயமடைந்த நிலையில் இந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது தாய் தந்தை வாழ்ந்த வீட்டில் வாழ்கின்ற போதிலும் அந்த வீட்டில் அவரின் கடைசி சகோதரன் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
எனினும் அவரது சகோதரனும் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது 15 வயது மகள் ஒருவரும் கடுமையான தோல் நோய் ஒன்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு அந்தப் பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மூலம் உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/community/01/144871?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment