Friday, May 5, 2017

மூவாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!! முந்துங்கள்…


முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கண்காணிப்பதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்கு முகநூல் உரிமையாளர் Mark Zuckerberg தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் வருடத்திற்குள் இந்த பணியாளர்கள் இணைந்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், முகநூல் வலைத்தளத்தில் பதிவிடப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள், குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளும் காணொளிகள் இந்த குழுவினால் கண்காணிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் கொலை மற்றும் தற்கொலைகள் மேற்கொள்ளும் காட்சிகள் கடந்த காலங்களில் நேரலையாக முகநூலில் காட்டப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தினுள் மாத்திரம் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், தாய்லாந்து நாட்டவர் ஒருவர் தனது குழந்தை கொலை அவரும் தற்கொலை செய்துக் கொள்வதனை நேரலை காட்டியுள்ளார். மற்றைய சம்பவம் நபர் ஒருவரின் கொலையாகும்.
புதிய கண்காணிப்பு திட்டத்தை ஆரம்பித்து தெளிபடுத்தும் வகையில் மார்க் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
சட்டத்தை மீறுவதோடு நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானவற்றை கண்காணிப்பதற்கு தற்போது 4500 பேர் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.canadamirror.com/canada/86710.html

No comments:

Post a Comment