தொலைக்காட்சி!!

Saturday, May 13, 2017

இந்திய பிரதமரின் ஹட்டன் உரை! கொதிப்பில் சில சிங்கள ஊடகங்கள்

இந்திய பிரதமர் ஒருவர் முதல் முறையாக வெளிநாடு ஒன்றில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளதாகவும் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் அது முதல் முறையாக நடந்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கையில் 24 மணி நேரம் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார்.
இந்திய பிரதமர் 14 வது சர்வதேச வெசாக் தின வைபவத்தில் கலந்து கொள்ளவே இலங்கை வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
எனினும் இந்திய பிரதமர் இலங்கையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதம அதிதியாக உரையாற்ற உள்ளதாக எந்த அறிவிப்புகளிலும் குறிப்பிடப்படவில்லை.
மக்களை வெற்றி கொள்வதற்காக அவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசியல்வாதிகள் வழங்குவார்கள் அன்றி வெளிநாடுகளில் தலைவர்கள் வழங்கியதை கண்டதில்லை.
ஆனால், இந்த புதிய அனுபவம் முதல் முறையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கை மக்களுக்கு இது நன்றாக தெளிவாகும்.
டிக்கோயா வைத்தியசாலை நவீனமயப்படுத்தப்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 18 திகதி திறந்து வைக்கப்பட்டதை இந்திய புலனாய்வு சேவைகளின் அதிகாரிகள் அறிந்து வைத்திருந்தனர்.
ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலையை மீண்டும் இந்திய பிரதமர் திறந்து வைப்பது ராஜதந்திர ஏமாற்று வேலை.
வைத்தியசாலையை திறந்து வைப்பதை விட மேலதிகமான ஒன்று பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பிரதமரிடம் காணமுடிந்தது.
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை மேடையில் வைத்து கொண்டு இந்தியாவின் மாநிலம் ஒன்றின் கூட்டத்தில் உரையாற்றுவது போல் இந்திய பிரதமர் உரையாற்றினார்.
இது 1983 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி வடக்கு மக்கள் எமது சகோதரர்கள் எனக் கூறி விமானம் மூலம் யாழ்ப்பாணத்தில் பருப்பு போட்டதற்கு இணையானதாக இருக்கக் கூடும் என அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
இந்த சிங்கள இணையத்தளம் இவ்வாறு கூறியிருந்த போதிலும், இந்திய பிரதமரின் ஹட்டன் கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட கூட்டமாகும்.
சில சிங்கள இணையத்தளங்கள் இனவாத நோக்கில் இந்திய பிரதமர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியதை விமர்சித்து வருகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த பொதுக் கூட்டத்தில்..
தமிழர்கள் உலகில் பழமையாக மொழிகள் ஒன்றான செம்மொழியை பேசுகின்றனர் என பெருமைப்பட தெரிவித்தது.
அகஸ்திய மாமுனிவரை பௌத்த மதத்துடன் தொடர்புப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கனியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளீர் எனக் கூறியதை எடுத்துக்கூறியது.
தமிழர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர் எனக் கூறியது. மலையக தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து தருவதாக கூறியமை.
வடக்கு, கிழக்கில் இரண்டு நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து தருவதாக தெரிவித்தது என்பன காரணமாகவே சில சிங்கள இணையத்தளங்கள் இந்திய பிரதமரை விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/politics/01/145607

No comments:

Post a Comment