தொலைக்காட்சி!!

Wednesday, May 3, 2017

இலங்கையின் விசா முறையில் மாற்றம்!

இலங்கையின் விசா முறையில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் நிலவும் சுமூகமான நிலை காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் அவர்களின் நலன் கருதியே விசா முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எந்தச் சிக்கலும் இன்றி இலகுவான முறையில் விசாவை வழங்குவதற்கு திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய முறையின் கீழ் இரட்டை பிரஜா உரிமையும் வழங்கப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதில் நிலவும் சிக்கல் காரணமாக புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/statements/01/144493?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment