Saturday, May 27, 2017

ஸ்ரீவித்யாவின் வரலாற்றில்.....

கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் மகளாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார். இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார்.
1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் செல்லுலாய்டில் பூத்த க்ளாசிக் காதல் அந்த காலத்தில் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
1975ல் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மீண்டும் கமல்- ஸ்ரீவித்யா இணைந்து நடித்தனர். தொடர்ந்து 1976ம் ஆண்டில் சமஸ்யா என்ற மலையாளப் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிக்கும் போது கமலஹாசனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அது அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
நடிகர் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு 1977-78ம் ஆண்டில் நட்பு ஏற்பட்டது. காதல் தோல்வியில் இருந்த ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து ஆறுதல் கூறி வந்தார். அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.
ஶ்ரீவித்யா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். ஸ்ரீவித்யா வீட்டில் உள்ளவர்களை சமாதனம் செய்து ஒரு வழியாக மதம் மாறி 19.01.1978 ஜார்ஸ் தாமஸை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தமிழ், இந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார். படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் கணவர் தாமஸ் பொறுப்பில் விட்டார்.
நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோசடி கையழுத்து போட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிய வர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது அவர் புரிந்து கொண்டார். கணவர் தாமஸ் உடன் 9 வருடம் மட்டும் வாழ்ந்து விட்டு 1987ம் ஆண்டில் விவகாரத்து பெற்றார். இருந்த போதிலும் கணவர் தாமஸ் இவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார்.
மீண்டும் நடிகர் கமல்ஹாசனுடன் தனது நட்பை தொடர்ந்து அவருடன் தொடர்ந்து படங்கள் நடித்தார்.1986ல் புன்னகை மன்னன், 1989ல் அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், நம்மவர், காதலா காதலா ஆகிய படங்களிலும் நடிகர் ரஜினியுடன், மாப்பிள்ளை, தளபதி, உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லி, அம்மா, அக்கா, முக்கிய கேரக்டரில் நடித்தார்.ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் பரிதாபகரமான நிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்றார்.அந்த சமயத்தில் யாரையும் பார்க்க மறுத்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையில் உணர்ச்சி வசப்பட்டு கமல் அழுது வெளியே வந்து உடல் நலம்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம் என தெரிவித்தார்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தனது 53வது வயதில் 2006ல் ஸ்ரீவித்யா காலமானார்.கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி திபாவளிக்காக தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீவித்யாவை தான் காதலித்தாக கமல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment