Thursday, May 11, 2017

உலகிலேயே மிகவும் நீளமான பிரமிக்க வைக்கும் மணல் புத்தர்!



உலகிலேயே மிகவும் நீளமான மணல் புத்தர் கொழும்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/special/01/145300?ref=lankasri-home-dekstop
குறித்த புத்தர் சிலையை வடிவமைப்பதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்த சுதர்சன் பட்நாயக் இதனை நிறைவு செய்துள்ளார்.
14ஆவது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டே குறித்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த நீண்ட புத்தரை உருவாக்கியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 14 வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில்,பட்நாயக் இலங்கை வந்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பாராளுமன்ற கட்டடத் தொதிக்கு அருகில் உலகின் மிக நீண்ட 40 அடி நீளம் கொண்ட மணல் புத்ததரை வடிவமைத்துள்ளார்.
வடிவமைக்கப்பட்ட மணல் புத்தரின் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட கலைஞர் சுதர்சன் பட்நாயக், சமீபத்தில் 10ஆவது மாஸ்கோ சாண்ட் கலை சாம்பியன்ஷிப் போட்டியில்தங்க பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment