Sunday, May 21, 2017

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்குமான அறிவிப்பு-வாக்காளராக பதிவு செய்யுங்கள்!

2017 ஆம் ஆண்­டிற்­கான தேருநர் இடாப்புத் திருத்தம் செய்­யப்­பட்டு வரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் 18 வயதை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை புதிய வாக்­கா­ள­ராக பதிவு செய்து கொள்ள முன்­வர வேண்டும் என சப்­ர­க­முவ மாகா­ண­சபை ஐ.தே.க உறுப்­பினர் வை.எம்.இப்ளார் வேண்டுகோள் விடுத்­துள்ளார்.
வாக்­காளர் தேருநர் இடாப்­பு­களின் திருத்தப் பணிகள் தற்­போது நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரி­வு­க­ளிலும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. இதற்­கான விண்­ணப்பப் படி­வங்கள் கிராம சேவ­கர்கள் மூல­மாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் பிறந்த அனை­வரும் புதிய வாக்­கா­ளர்­க­ளாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். எனவே இது விட­ய­மாக கூடிய ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­மாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சப்­ர­க­முவ மாகா­ணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை வாக்­கா­ளர்­க­ளாக பதிவு செய்து கொள்­வதில் சிரத்தைக் காட்­டு­வ­தில்லை என சுட்­டிக்­காட்­டிய அவர் வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தை புரிந்­து­கொள்ள வேண்டும் என்றார்.
எதிர்­கா­லத்தில் பல தேர்­தல்­களை நாடு சந்­திக்கவுள்ள நிலையில் ஒவ்­வொ­ரு­வரும் தம்மை வாக்­கா­ளர்­க­ளாக பதிவு செய்து கொள்­வ­துடன், வீட்டில் வசிப்போரில் புதிய வாக்காளர்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment