தொலைக்காட்சி!!

Monday, April 10, 2017

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: கடகம்

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்1
கடமையில் கண்ணாக இருக்கும் கடகராசி அன்பர்களே! கொஞ்சம் அலைச்சல் கொஞ்சம் ஆதாயம். குரு பகவான் 3-ம் இடமான கன்னிராசியில் இருந்து செப்.1ல் துலாமிற்கு மாறுகிறார்.
2018 பிப்.13-ல் அங்கிருந்து விருச்சிகம் செல்கிறார். ராகு 2-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் உங்கள் ராசிக்கு வருகிறார்.
கேது 8-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26ல் 7ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.
சனி 5-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14 – ஜீலை 31
குரு சாதகமற்று இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை ஏற்படும். கையில் பணப்பழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உறவினர் வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புகேற்ற வருமானம் வரும். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் அலைச்சல் இருப்பதை தவிர்க்க முடியாது. கலைஞ்ர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.
மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல விளைச்சல் காண்பர். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.
ஆகஸ்ட் 1- ஜனவரி 31
குடும்பத் தேவைகள் ஓரளவு நிறைவேறும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது.
ராகுவால் வீண் அலைச்சல், முயற்சியில் தடை ஏற்படலாம். சுப விஷயத்தில் தடைகள் ஏற்பட்டு விலகும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.
தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும்.
அரசியல் வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம்.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக தான் இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.
2018 பிப்ரவரி- ஏப்ரல் 13
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் யோகமுண்டு.
சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்கலாம்.
மாணாவர்கள் கடந்த ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர். கலைஞ்ர்களுக்கு அரசிடமிருந்து பாரட்டு விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலன் காண்பர். விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர்.
பெண்களால் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டிலிருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.
பரிகாரம்: பெருமாளுக்கு நெய்தீபம், சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், செல்ல வேண்டிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
- Dina Malar
http://news.lankasri.com/astrology/03/122810?ref=category
http://temple.dinamalar.com/news_detail.php?id=66847

No comments:

Post a Comment