தொலைக்காட்சி!!

Saturday, April 8, 2017

ஆர்.கே.நகரில் பறக்கும் படையினருக்கு நிர்வாணமாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பெண்கள்: பரபரப்பு வீடியோ

ஆர்.கே.நகர் தொகுதியில் சோதனைக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினருக்கு டிடிவி தினகரன் அணி மகளிரணியினர் சேலையை அவிழ்த்து காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒருவீட்டில், பணம் பதுக்கிவைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த வீட்டில் சோதனை நடத்த சென்ற பறக்கும் படையினருக்கு சசிகலா அணி மகளிரணியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஓட விட்டுள்ளனர்.
இதுகுறித்து பறக்கும்படையினர் கூறியதாவது, எங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் சோதனை நடத்தச் சென்றோம்.
அப்போது அங்கு இருந்த பெண்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒர் அறைக்குள் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை.
அதைமீறி உள்ளே செல்ல நாங்கள் முயன்றபோது வாசலை வழிமறித்த பெண்கள், ஆவேசமாக சோதனைதானே நடத்தவேண்டும் என்று கூறியபடி சேலையை கழற்றி எறிந்தார்.
இதை எதிர்பார்க்காத நாங்கள் உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினோம்.
அதற்குள் நடுத்தர வயது பெண் ஒருவர் தன்னை முழு நிர்வாணமாக்கிக்கொண்டார், திக்குமுக்காடிய நாங்கள் அந்த இடத்தைக் காலிசெய்து விட்டோம் என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment