தொலைக்காட்சி!!

Monday, April 10, 2017

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மிதுனம்


மிதுனம்
புத்தி கூர்மையுடன் பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!
மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
பணமழை பொழியும்! பொன் பொருள் சேரும்
ஆண்டின் தொடக்கத்தில் 4-ம் இடமான கன்னிராசியில் உள்ள குரு, செப்.1ல் துலாம் ராசிக்கு மாறுகிறார்.
அதன்பின் 2018- பிப்13-ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 3-ல் உள்ள ராகு ஜீலை 26-ல் 2ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார்.
கேது 9-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். ராசிக்கு 6-ல் இடமான விருச்சிகத்தில் உள்ள சனிபகவான் டிச.18-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் அடிப்படையில் பலனை காணலாம்.
ஏப்ரல் 14- ஜீலை 31
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு நிலைக்கும். சுப விஷயத்தில் விடாமுயற்சி தேவைப்படும்.
சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சனிபகவானின் 10ம் இடப்பார்வையால் மழை போல் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
பணியாளர்கள் வேலைப்பளுவை சந்திப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்கள் தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31
குருபகவான் 5-ம் இடத்தில் இருப்பதால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும்.
அதிர்ஷ்டவசமாக பொருளாதார வளம் பெருகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக பெண் கலைஞர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயத்தில் உழைப்புகேற்ற மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் வரும்.
வழக்கு, விவகாரங்களில் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
உஷ்ணம், தோல் தொடர்பான நோய் ஏற்படலாம்.
2018 பிப்ரவரி1- ஏப்ரல் 13
குடும்ப பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடை குறுக்கிடலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலில் லாபம் சுமாராக இருக்கும்.
பணியாளர்களுக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர்.
அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனடைவர். வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்.
பரிகாரம்: சனிக்கிழமை நவக்கிரக வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு. செல்ல வேண்டிய கோவில் திரு நாகேஸ்வரம் நாகநாதசுவாமி.
- Dina Malar
http://news.lankasri.com/astrology/03/122737?ref=category

http://temple.dinamalar.com/news_detail.php?id=66846


தமிழ் புத்தாண்டு ராசிபலன்:மேஷம்

அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க!
குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி அன்பர்களே!
ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல் 7ம் இடமான துலாம் ராசிக்கு மாறும் குரு பிப்.13வரை அங்கு இருப்பார்.
அதன் பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராகு 5-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் கடகத்திற்கு மாறுகிறார்.
கேது 11-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். சனிராசிக்கு 8-ல் இருக்கிறார். அவர் டிச.18-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஏப்ரல் 14- ஜீலை 31
குருவின் பார்வையால் வருமானம் உயரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகவும்.
சுபநிகழ்ச்சிகள் விடாமுயற்சியால் கைகூடும் வீடு, மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இடமாற்றம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல்வாதிகள் பலன் எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும்.
மாணவர்களுக்கு முயற்சிகேற்ற வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்மூலம் மகசூல் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.
ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31
குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்பழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.
வியாபாரிகள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர்.
2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13
மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளி போகலாம். பணியாளார்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.
வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். குருவின் 5-ம் பார்வையால் வருமானத்திற்கு குறைவிருக்காது, கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஆகும்.
அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் திருச்செந்தூர் முருகன்.
- Dina Malar
http://news.lankasri.com/astrology/03/122625?ref=category
http://temple.dinamalar.com/news_detail.php?id=66842


தமிழ் புத்தாண்டு ராசிபலன்: ரிஷபம்!


கார்த்திகை 2,3,4 , ரோகிணி, மிருக சீரிஷம் 1,2
எந்த சூழலையும் சமாளிக்கு தைரியமுள்ள ரிஷப ராசி அன்பர்களே!
துர்முகி ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் வக்கிரம் அடைந்து 4-ம் இடமான சிம்மத்தில் உள்ளார். அவரால் மன உளைச்சலும், உறவினர் வகையில் கருத்து வேறுபாடும் வரலாம்.
அவர் ஆக.2க்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் பல்வேறு நன்மைகளை பெறலாம். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை தருவார்.
மேலும், அவரது 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. இதன் மூலமும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். சனி பகவான் தற்போது 7ம் இடத்தில் இருக்கிறார்.
பொதுவாக இந்த இடத்தில் இருக்கும்போது அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். சேர்க்கை சகவாசத்தால் பிரச்சனை வரலாம்.
ராகு 4ம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் மற்றும் சிற்சில குடும்ப பிரச்சனைகளையும் உருவாக்கலாம். கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருப்பதால் உடல் உபாதைகளை தரலாம்.
ஆக-2 வரை குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்ற வேண்டி வரலாம். அனாவசிய செலவு ஏற்பட இடமுண்டு.
இந்த சமயத்தில் பொருள்களை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். ஆக.2க்கு பிறகு தடைகள் விலகி எடுத்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கோ, குடும்பத்தில் மற்றவர்களுக்கோ நடக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். மன உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். பணப்புழக்கம் உயர்வதால் கடன்கள் அடைபடும். கணவன் –மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.
வேலை இல்லாமல் தவித்தவர்கள் அந்த பிரச்சனைக்கு முடிவு காண்பர். சொந்த தொழில் துவங்கி சம்பாதிக்க இடம் உண்டு. மொத்தத்தில் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை ரிஷப ராசியினர் சுப பலன்களை அனுபவிப்பர்.
தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனால் அதற்கேற்ப வருமானமும் உயரும். எந்த தொழிலிலும் அதிக பண முதலீடு செய்யவேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு வரத்தான் செய்யும்.
அரசு வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். சிலருக்கு பொருள் விரயம் ஆகலாம். ஆக.2க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு பகவானின் 7-ம் இடத்து பார்வையால் தொழிலில் உயர்வும், வியாபாரத்தில் நல்ல லாபமும் காணலாம். பணப்புழக்கம் மேம்படும்.
பணியாளர்கள் ஆண்டு துவக்கத்தில் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியது வரலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.
ஆக.2க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். சலுகைகளை விரைந்து பெற இடமுண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர்.
அரசியல்வாதிகளின் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். மாணவர்களுக்கு சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆனால் இவர்கள் அனைவருமே ஆகஸ்ட் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம்.
ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும்.
பெண்கள் நகை மற்றும் ஆடை சேர்க்கையால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
2017 ஜனவரி 16- ஏப்ரல் 13 குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது.
பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம். அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருள்களை வாங்கலாம்.
பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. அதே நேரம் குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால், கடும் முயற்சி செய்தால் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் அமையும்.
தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்கவேண்டாம். எதையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள் மிக அதிகமான முதலீட்டை கொட்ட வேண்டாம்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பி விடலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் சாகுபடி எதையும் செய்யவேண்டாம். வழக்கு விவகாரங்களை சமாதானமாக பேசி தீர்ப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித் தனம். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: விநாயகரையும், விஷ்ணுவையும் தொடர்ந்து வழிபடுங்கள். நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். டிசம்பர் மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
- Dina Malar
http://news.lankasri.com/astrology/03/122675?ref=lankasritop

http://temple.dinamalar.com/news_detail.php?id=66844

No comments:

Post a Comment