தொலைக்காட்சி!!

Saturday, April 29, 2017

மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில்!! டென்மார்க் நிரோஷன் பரிதாப மரணம்

டென்மார்க்கில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இலங்கையரது சிகிச்சைகள் பலனளிக்காததால், அவரது செயற்கை உயிர் காப்பு சாதனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
கசுன் நிரோஷன் ஃபேர்டினன்ட் (36) என்ற சமையல் கலைஞர், கடந்த திங்களன்று தனது காரில் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் மரம் ஒன்றுடன் வேகமாகச் சென்று மோதினார். இதில் அவர் படுகாயமுற்றார்.
இதையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் கசுன் வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலை தேறலாம் என்ற நம்பிக்கையில் செயற்கை உயிர் காப்பு சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், செயற்கை உயிர் காப்பு சாதனத்தை அகற்றிவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளது.
டென்மார்க்குக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்தவர் கசுன். டென்மார்க்கின் பிரபலமான ‘சோல்ட் எண்ட் பெப்பர்’ உணவகத்தில் பணியாற்றிவந்தார்.
திருமணமான இவர், தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விரைவில் டென்மார்க்குக்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மிகவும் கனிவான மனமும், தோழமை உணர்வுடன் பழகும் சுபாவமும் கொண்ட கசுனின் இழப்பு அதிர்ச்சி தருவதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து டென்மார்க் பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.


டென்மார்க்கில் உயிருக்கு போராடும் இலங்கையர் - அவசர உதவி கோரும் ஊழியர்கள்

டென்மார்க்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசுன் நிரோஷன் பேர்டினன்ட் என்ற 36 வயதுடைய இலங்கையரே விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த கோர விபத்து கடந்த திங்கட்கிழமை Kentdale பகுதியில் உள்ள அதிவேகப் பாதையில் ஏற்பட்டுள்ளது.
குறித்த இலங்கையரின் கார், மரம் ஒன்றுடன் மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிரோஷன் பேர்டினன்ட் ரோயல் பர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டென்மார்க்கில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நிரோஷன் பணியாற்றி வந்துள்ளார்.
நிரோஷன் அன்பானவர், சிறந்த சமையற்காரர் என டென் மார்க் சமூகத்தில் மதிப்பு பெற்றவர் என விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அவரது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் டென்மார்க்கிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிரோஷனின் சகோதரர் இன்றைய தினம் டென்மார்க் விஜயம் மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையர் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து காரை மரத்துடன் மோதினார் னஎன்பது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நிரோஷனின் குடும்பத்தினருக்கு 5000 பெறுமதியான அமெரிக்க டொலரை பெற்றுக் கொடுக்க விடுதி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக GoFundMe என்ற பக்கத்தை உருவாக்கி உதவி கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/othercountries/01/144110?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment