தொலைக்காட்சி!!

Tuesday, April 25, 2017

மொட்டுக்கள் விரிய முதல் வெடிக்கப் படுகின்றன!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!

வந்தாறுமூலையில் கணவன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மனைவி ஆசிரியர் இருவரும் அரச அலுவலகர் என்பதால் காலையில் நேரத்தோடு சமைத்து இருவரும் தமது வேலைக்கு சென்றால் அவர்களது 7வயது மகன் பாடசாலை முடிந்து தமது வீட்டிலுள்ள டிஸ்க் அலைவரிசை கொண்ட அன்ரெனா பூட்டப்பட்டிருப்பதால் பாடசாலை முடிந்து வந்த உடன் சிறுவன் கதவை பூட்டினால் தமக்கு தேவையான சிறுவர் காட்டூன்கள் முழுநேரம் பார்த்து பொழுதை கழிப்பது வழமையாகும்.
திடீரென சிறுவனுக்கு சிறுநீர் போக முடியாமல் வலியினால் அவதியுற உடனே தனியார் வைத்தியசாலை அனுகிய போது சிறுவனின் ஆண் உறுப்புகளில் சிறுகாயம் இருந்து நாளடைவில் தொற்றுக்குள்ளாக்கப்பட்டு வீக்கமடைந்துள்ளது.
உடனே வைத்தியர் சிறுவனிடம் சில விடயங்களை அன்போடு வினாவி இறுதியில் சிறுவன் தாய், தந்தையர் வேலை சென்று கலைந்து வீடு மாலை 4மணியாகுவதால் தமது தனிமைகளை போக்க சிறுவன் காட்டூன் ஆபாச காட்சிகள் ஆழமாக ஊடுறுவி பாலியல் தூண்டல்களை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி பெற்றோருக்கு புத்தியுடன் எடுத்துக்கூறி அரச வேலை செய்யும் பெற்றோர் தமது குழந்தைகள் அலுவலக நேரம் இருக்கும் நேரம் வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துவது சிறந்த பெற்றோருக்குரிய கடமையாகும்.
எப்படி இந்திய சினிமா பாலியல் நடவடிக்கைகளை எமது சிறார் மனதில் ஊடுறுவுகின்றது என்பதை ஆராய்ந்தால் சிலவற்றில் பெற்றோர்கள் தெளிவு பெறலாம்.
தங்களுடைய பிள்ளைகள் இன்று சினிமா படங்கள் மற்றும் நாடகங்கள் பார்த்து கெட்டுபோய்விடும் என்ற நல்லெண்ணத்தில் சில பெற்றோர்கள் கார்டூன் படங்களை வாங்கிக்கொடுக்கின்றனர்
ஆனால் அந்த கார்டூன் படங்களில் என்ன_இருக்கிறது என்று எந்த பெற்றோரும் அதை போட்டுப்பார்பதும் இல்லை
எந்த படங்களை பார்த்தால் கெட்டுப் போய்விடும் என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தவிர்த்தீர்களோ அதை விட மோசமான கருத்துக்களை கொண்டதுதான் இன்றைய கார்ட்டூன்கள்
மானக்கேடான தீய விசயங்களை கார்டூனில் புகுத்துவதிலேயே இந்திய சினிமா சதி சிறுவர்களிடத்திலிருந்தே ஆரம்பமாகின்றது அரை குறை ஆடையுடன் பெண் கதாநாயகிகளை வடிவமைத்து படுக்கையறை காட்சிகளை புகுத்தி உதட்டில்_முத்தமிடும் காட்சிகளை சர்வ சாதாரணமாக சேர்த்து காம வெறியை வளர்த்துவிட இந்த கார்ட்டூன்கள் துணை போகின்றது.
” விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் அது வெட்க கேடானதும் தீய வழியாகவும் இருக்கிறது ” உபநிடதம் கூறுகின்றது.
விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்று இறைவன் கூறுகிறான் ஆனால் நாம் நம்மையறியாமல் பிள்ளைகளுக்கு எப்படி விபச்சாரம் செய்வது என்று கற்றுக்கொடுக்கின்றோம் கார்டூன் மூலமாக
அது போன்றுதான் எவ்வாறு திருடுவது , மது அருந்துவது மற்றும் இணைவிப்பது ,போலியான ஆசைகள், ஒழுக்கக்கேட்டை செய்யத்தூண்டுவது போன்ற கருத்துக்களை பிஞ்சு நெஞ்சிலே எப்படி நஞ்சை விதைக்கிறார்கள் என்று அவர்களுடன் உட்கார்ந்து பார்த்தால் புரியும்.

No comments:

Post a Comment