தொலைக்காட்சி!!

Monday, April 24, 2017

வவுனியா – யாழ் பகுதிகளில் பெற்றோலுக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்!

வவுனியா பெற்றோல் நிலையங்களில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு!
வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்
நல்லாட்சி அரசின் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வடமராட்சி புலோலியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் பெற்றோலுக்கு முண்டியடிக்கும் காட்சி…… இது…நல்லாட்சியா?… சொல்லாட்சியா..?
http://www.jvpnews.com/srilanka/231854.html

No comments:

Post a Comment