Saturday, April 8, 2017

கிறீன் கார்ட் அறிமுகம் செய்ய முடிவு! நிரந்தர வசிப்பிடம், சொத்துரிமை!

சவுதி அரசாங்கம் கிறீன் கார்ட் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அந்த திட்டமானது இப்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
சவுதி பிரஜையொருவருக்கு உரிமையில்லாத வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்கு, இந்த கிறீன் கார்ட் உரிமையாளர் வருடாந்தம் 14200 ரியாலை சவுதி அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும்.
இதேவேளை, சவுதி பிஜையொருவருக்கு கிடைக்கும் பயன்கள் பல இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறீன் கார்ட் உரிமையாளர் ஒருவர் வருடாந்தம் 14200 ரியாலை வருடாந்த சவுதி அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்னும் இந்த நிபந்தனைகளுக்கு உடன்படும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக் கொள்ளவும், சொத்துரிமைகளை வைத்திருக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய வியாபார நிறுவனமொன்றை ஆரம்பிக்கவும், ஓய்வுதியம், அரசாங்கத்தினால் வழங்கப்படுவதுடன், சுகாதார கொடுப்பனவுகள், கல்வி என்பனவற்றை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். தொழில்களை மாற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
இந்த சேவைகள் தவிர, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர வீசா வழங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. பணிப்பெண்களுக்கான வீசா இரண்டை விநியோகிக்கவும் இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment