தொலைக்காட்சி!!

Saturday, April 8, 2017

ஜேர்மனியில் விஞ்ஞானிகள் போட்டி! தாயக தமிழ் மாணவனுக்கும் வாய்ப்பு

ஜேர்மனில் இடம்பெறும் விஞ்ஞானிகள் போட்டியில் கலந்து கொள்ளவதற்கு இலங்கை மாணவர்கள் இருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜேர்மன் ஸ்டுட்கார்ட்டில் இடம்பெறும் 24வது தேசிய இளைஞர் விஞ்ஞானிகள் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ரகிது விக்ரமரத்ன மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரன் ஜீட் சஜித் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அவர்கள் போட்டியில் கலந்துக் கொள்வதற்கான விமான டிக்கட்டுகள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ள 39 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment