தொலைக்காட்சி!!

Monday, April 10, 2017

கத்தி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஜேர்மனியில் அகதி ஒருவரின் வெறிச்செயல்

ஜேர்மனியில் ஆண் நண்பருடன் விடுமுறையை கழிக்க சென்ற இளம்பெண்ணை அகதி ஒருவர் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Siegaue Nature Reserve பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் தமது ஆண் நண்பருடன் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார் 23 வயதான இளம்பெண் ஒருவர்.
இருவரும் கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கத்தியுடன் நபர் ஒருவர் அந்த கூடாரத்தை நெருங்கியுள்ளார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அந்த இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் நண்பரை கொலை மிரட்டல் விடுத்து நெருங்க விடாமல் செய்துள்ளார். மட்டுமின்றி நடப்பவற்றை பார்க்கும்படியும் அவரை குறித்த நபர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் நண்பர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனைக்கு இட்டுச்சென்றனர்.
இதனிடையே பெண்ணின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், நபர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ சோதனையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் அவர் என்பதும் உறுதியாகியுள்ளது.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர் கானா நாட்டவர் என்பதும், ஜேர்மனியில் புகலிடம் கோரியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கும் முன்னர் குறித்த நபர் அருகாமையில் உள்ள விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நபர் ஒருவரின் தோள்பை ஒன்றை திருடிவிட்டு தப்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு பின்னர் Siegburg பகுதியில் வைத்து பொலிசார் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்து அடையாளம் கண்ட நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 31 வயதான குறித்த அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment