Friday, April 7, 2017

உடன் பிறந்த தங்கையை 4 ஆண்டுகளாக கற்பழித்த சகோதரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் உடன் பிறந்த தங்கையை தொடர்ந்து 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்த சகோதரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் உள்ள Syracuse பகுதியில் Kathryn Bailey(தற்போதைய வயது 23) என்ற பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவருக்கு James Bailey(31) என்ற சகோதரன் இருக்கிறார்.
இந்நிலையில், ஒரே வீட்டில் வளர்ந்த இருவரையும் பெற்றோர் சுதந்திரமாக விட்டுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சகோதரன் 9 வயதான தனது சகோதரியுடன் அத்து மீறி நடந்துள்ளார்.
அதாவது, கடந்த 2003 முதல் 2006 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் தனது தங்கையை அவர் கற்பழித்து வந்துள்ளார்.
பெற்றோரிடம் இதுகுறித்து மகள் புகார் கூறியபோதிலும் அவர்கள் இதனைக் கண்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் 12 வயது வரை தனது மூத்த சகோதரனால் பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வந்துள்ளார்.
பின்னர், பள்ளிக்கு செல்லும் பருவத்தில் நடந்தவற்றை அனைத்தையும் தோழிகளிடம் தெரிவிக்க இவ்விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் விசாரணை செய்தபோது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க தவறியதற்காக தாயார் நீதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நீதிபதி முன்னிலையில் தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளையும் பாதிக்கப்பட்ட சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளியான சகோதரன் மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

Post a Comment