தொலைக்காட்சி!!

Tuesday, April 25, 2017

யாழ். முதியவர், 33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா நமசிவாயம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
பொன்னையா நமசிவாயம் மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் திகதி பொன்னையா, சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார்.
தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை 1945 ஆம் ஆண்டு திருமணம் செய்த பொன்னையா நமசிவாயம், 1946 ஆம் ஆண்டு கிராம சேவையாளராக கடமையேற்றி ஓய்வுபெற்றார். இவருக்கு 11 பிள்ளைகளும் 33 பேரப்பிள்ளைகளும் 12 பூட்ட பிள்ளைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment