Sunday, April 23, 2017

துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் ,12 பேர் காயம்!

யாழ் வடமராட்சி துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
நெல்­லி­ய­டிப் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட துன்­னாலை வேம்­ப­டிச் சந்­திப் பகு­தி­யில் பிறந்­த­நாள் கொண்­டாட்ட நிகழ்வொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில், வட­ம­ராட்சி துன்­னா­லை­ பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பெரும் பதற்­றம் ஏற்­பட்­டுள்ளது.
இரு குழுக்களாக பிரிந்து அவர்­கள் அங்கு மோத­லில் ஈடு­பட்­டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, சுமார் 500 இற்­கும் மேற்­பட்ட கண்­ணா­டி­ சோடாப் போத்­தல்­கள், கற்­கள் போன்­ற பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் வாள்­கள் மற்­றும் கம்­பி­க­ளை­ வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
இதன் போது அங்கு பெரும் பதற்­றம் ஏற்­பட்­டுள்ளதுடன், சம்பவ இடத்­துக்கு பொலி­ஸார் வருவதை அறிந்த குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது இரு குழுக்களிலும் படு­கா­ய­ம­டைந்த 7 பேர் மந்­திகை வைத்தியசாலையிலும், 4 பேர் பருத்திதுறை வைத்­தி­ய­சா­லை­யிலும் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்­பவ இடத்­தி­லி­ருந்து வாள், கம்­பி­கள் மற்­றும் உடை­யாத சோடாப் போத்­தல்­கள் போன்றவை பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டன.
மோதல் இடம்­பெற்ற பகுதியிலுள்ள வீதி­யில் கண்­ணா­டி­யி­லான சோடாப் போத்­தல்­கள் உடைக்­கப்­பட்டு வீதி, கண்ணாடித் துண்­டுகளால் நிரம்பிக் காணப்பட்டது.
இதன் காரணமாக பொலி­ஸா­ரின் வாக­ன சில்லு ஒன்­று சேதமடைந்து காற்று போனமை குறிப்பிடத்தக்கது.
இம்மோதலால் பாதிக்கப்பட்ட அந்த வீதியை பொலி­ஸார் அறி­வு­றுத்­த­லில் நேற்­றி­ரவு துப்­ப­ரவு செய்­யும் பணி­கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்பக்களை வழங்கினர்.
குறித்த தாக்குதலை தொடர்ந்து நெல்­லி­யடி பருத்­தித்­துறை மற்­றும் வல்­வெ­டித்­துறை பொலி­ஸார் இணைந்து நேற்று இரவு முழு­வ­தும் மோதல் இடம்­பெற்ற பகு­தி­யில் ரோந்து பணி­யில் ஈடு­பட்­ட­னர்.
நேற்று நள்­ளி­ரவு 12 மணி­வரை சந்­தே­க­ந­பர்­கள் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. பொலி­ஸார் தொடர்ந்து தேடு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

No comments:

Post a Comment