தொலைக்காட்சி!!

Tuesday, April 11, 2017

அமரர் மகேஸ்வரி வைத்தியநாதர் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 25 மார்ச் 2016
(முன்னாள் ஆங்கில ஆசிரியை- தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை)


யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி வைத்தியநாதர்(லேடி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இலக்கின்றி இலக்கணமும் இன்றி
இருப்பே வெறுப்பாகி இதயம் இரண்டாகி
இருண்ட வாழ்வாகி- இனி இழக்க ஏதுமின்றி

வாழ்வு தந்த வசந்தத்தை வழியில் தொலைத்து
வலுவிழந்தோம் - உருவிழந்தோம்
ஆண்டொன்றானது நாம் ஆண்டிகளாகி

புன்னகை மாறா எம் புதையலை
கருணை நிறை காவியந்தனை
காவு கொடுத்தோம்- கதியற்றுப் போனோம்!

அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே
நினைக்கையில் கண் நனைந்து கடந்திடும் கணங்கள்
மனங்களில் மறையாது உந்தன் நாட்கள்
எம் மரணம் வரை!
தகவல்
குடும்பத்தினர்

http://www.kallarai.com/ta/remembrance-20170407103696.html

No comments:

Post a Comment