தொலைக்காட்சி!!

Wednesday, March 29, 2017

பரீட்சையில் தோல்வி : தூக்கிட்டும், ரயில் முன் பாய்ந்தும் மாணவர்கள் தற்கொலை

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க.பொ.த சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால் இரு வேறு பகுதிகளில் உள்ள மாணவனும் மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில், ராகம பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கணித பாடத்தில் சித்தியடையாதமையால் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
பரீட்சையில் வெற்றிபெற முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொள்வதென்பது உண்மையில் முட்டாள் தனமான செயலாகும். இப்போது வெற்றிபெற முடியவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
ஆனால் அதை விடுத்து தற்கொலை என்பது சரியான முடிவு அல்ல. கஷ்டப்பட்டு பல கனவுகளுடன் வளர்த்த பெற்றோரை தவிக்கவிட்டு இவ்வாறான ஒரு முடிவை மாணவர்கள் எடுக்காதீர்கள். “தோற்று விட்டார்கள்“ என்று யாரேனும் கூறினால் அவர்கள் முன் வெற்றிபெற்று காட்டுங்கள். அதை விடுத்து இந்த உலகைவிட்டு ஓடி ஒளியாதீர்கள்.
பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகள் பரீட்சையில் தோற்று விட்டால் தயவு செய்து அவர்களை திட்டவோ, அடிக்கவோ வேண்டாம். மாறாக அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள், அவர்களுக்கு சக்தி கொடுங்கள்.அதை விடுத்து அவர்கள் மனதை கஷ்டப்படுத்தாதீர்கள்.
http://www.tamilwin.com/community/01/140847?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment