தொலைக்காட்சி!!

Thursday, March 2, 2017

கனடாவில் குறைந்த விலையில் எப்படியான வீடு வாங்கலாம்!

வன்கூவரில் தனிப்பட்ட வீடொன்றின் விலை பெரும்பாலான குடும்பங்களிற்கு எட்ட முடியாத அளவிற்கு அப்பாற்பட்ட விலையில் காணப்படும் நிலையில் ரொறொன்ரோவில் வீடொன்றின் சராசரி விலை-டொலர்கள் 770,000 காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில் கனடா பூராகவும் உள்ள நகரங்களில் எத்தகைய வீடுகளை வாங்கலாம் என்ற கண்ணோட்டத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் குறியீட்டுக்களின் பிரகாரம் விலை மாறுபட்டு காணப்படுவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
வன்கூவர் மற்றும் ரொறொன்ரோ சந்தைகளை பொறுத்த வரையில் ஒற்றை தனிவீடு ஒன்றை தேடுவது மிகவும் கடினமானதாக உள்ளது.
கடந்த ஆண்டில் வீட்டு விலைகள் வன்கூவரில் 19-சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் சராசரி விலை அதிக பட்சமாக $878,000-கொண்டோக்கள் உட்பட-உயர்ந்துள்ளது.
வன்கூவர்:
vancover
வன்கூவரில் வசதியான பகுதியில் 913சதுர-அடி கொண்ட 10 வயதான உயர அடுக்குமாடி குடியிருப்பு-உட்கள நீச்சல் தடாகம் உடற்பயிற்சி வசதிகள் சந்திப்பு அறை வசதிகள் கொண்ட பகுதியின் விலை$768,000 அடமான கடன் தொகைக்கு அப்பால் வாங்குபவர் மாதாந்த கட்டணமாக 360டொலர்கள் செலுத்த வேண்டும்.
எட்மன்டன்:
edmon
எட்மன்டனில் ஏராளமான ஏராளமான பிரிக்கப்பட்ட ஒற்றை வீடுகள் விலை வரம்புகளில் உள்ளன. 2659சதுர-அடி வீடு மூன்று வருடங்களிற்கு முன்னர் கட்டியது-மூன்று பிரிக்கப்பட்ட வாகன தரிப்பிடம் எரிவாயு நெருப்பிடம் மற்றும் gourmet சமையலறை-கிரனைட் கவுன்டரொப்புடன் கூடிய-வீடொன்றின் விலை $769,900
றிஜைனா:
regina
றிஜைனாவில் நிறைவேற்று பாணி கொண்ட2014ல் கட்டப்பட்ட 2,602 சதுர அடி வீடொன்றின் விலை$749,900. மூன்று படுக்கை அறைகள் மூன்று குளியலறைகள் அத்துடன் ஒரு டென் உடன் pie-வடிவ தொகுதிக்குள் அமைந்துள்ளது.
யுகொன்-ஹைநெஸ் சந்தி: $795,000
yukon
இங்கு பட்ஜெட்டிற்கு சிறிது அதிகம்.வனாந்தரத்தில் அமைந்துள்ள இந்த லாட்ஜ் ரொறொன்ரோவின் சராசரி வீட்டு விலைக்கு உட்பட்டது. 1.68 ஹெக்டர் நிலப்பரப்பிற்குள் 3,200சதுர அடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
வினிபெக்:
winnipeg
வினிபெக்கின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.$780,000. பட்ஜெட்டிற்கு சிறிது அதிகமாக உள்ளது. 2,221-சதுர அடிகள் கொண்ட வீடு.
ரொறொன்ரோ:
toronto
ரொறொன்ரோவில் வெஸ்ரன் வீதி மற்றும் எக்லிங்ரன் பகுதியில் அமைந்துள்ளது. வருமானத்திற்குரியதாக அமைந்துள்ளது. மேல் பகுதி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ் பிரிவிலும் மூன்றாவது தொகுதி ஒன்று உள்ளது. கட்டிடம் 100-வயதுடையது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட நுழைவாயில்கள் உண்டு. தனித்தனி மின் பனல்கள். $768,000.
மொன்றியல்:
montreal
1945ல் கட்டப்பட்ட இந்த வீட்டின் விலை 769,000 டொலர்கள். மொன்றியல் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ளது.
ஹலிவக்ஸ்:
halifax
2,800-சதுர அடிகள் கொண்ட இவ்வீடு ஹலிவக்சின் உயர் மட்ட கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. 100 வருடங்கள் பழமையானது.இவ்வீட்டின் விலை 775,000 டொலர்கள்.
டல்ஹவுஸ் பல்கலை கழக சுற்றுபுறத்தில் அமைந்துள்ளது.
பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட்:
prince
ரொறொன்ரோவின் சராசரி வீடொன்று அல்லது வன்கூவரின் சிறிய கொன்டோ ஒன்றின் சராசரி விலையை விட குறைவானது.738,880டொலர்கள்.  பிரின்ஸ் எட்வேட் ஐலன்டில் ஆடம்பர வாழ்க்கை ஒன்றை வாழலாம். சாளட்ரவுன் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.4,000சதுர அடிகளிற்கும் மேலானது. 2015ல் கட்டப்பட்டது. ஐந்து படுக்கை அறைகள் தியேட்டர்/ ஊடக அறை கொண்டது. நான்கு கார் கராஜ்கள்.
- See more at: http://www.canadamirror.com/canada/81910.html#sthash.xIZAUTcP.dpuf

No comments:

Post a Comment