தொலைக்காட்சி!!

Wednesday, March 29, 2017

இலங்கை தமிழர்களுக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்

நேரம் கூடிவரும்போது நாம் சந்திக்கலாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை தமிழர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
லைகா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் மாதம் இரண்டு நாள் பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதற்கு தமிழகத்தில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து, ரஜினி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதனிடையே, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம்.
நீங்கள் நலமுடன் வாழஇறைவனை வேண்டுகிறேன் என்று எழுதியுள்ளார்.


No comments:

Post a Comment