தொலைக்காட்சி!!

Tuesday, March 28, 2017

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு! முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவனும் இணைவு

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பவர்களாகும்.
அந்த 10 பேரும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.
அதற்கமைய கொழும்பு விஷாக்கா பெண்கள் பாடசாலை மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
கண்டி மஹாமாயா பெண்கள் பாடசாலை மாணவி எஸ்.எம்.முனசிங்க இராண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் ஆர்.எம்.சுகத் ரவிது மற்றும் மாத்தரை ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கம்பாஹா ரன்னாவலி பெண்கள் வித்தியாலயத்தின் மாணவி எச்.பீ.பபசரா மலிதி குமாரி நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு தேவி மகளீர் பாடசாலையின் டீ.எம்.ரனும் திஸரணி நாணயக்கார, காலி சங்கமித்த மகளீர் பாடசாலையின் ஏ.தம்ஸரா மேதாவி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர் ஏ.அபினந்தன் ஆகியோர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.
காலி சவுத்லேன்ட் வித்தியாலயத்தின் ரன்தினி டி சில்வா மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி ஆகிய மாணவர்கள் ஆறாம் இடத்தை பிடித்துள்ளனர்.

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் இருவர் சாதனை

http://www.tamilwin.com/education/01/140675?ref=lankasri-home-dekstop
சிறந்த பெறுபேறுகளை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள்
http://www.tamilwin.com/education/01/140677?ref=lankasri-home-dekstop

தமிழ்மொழியில் சாதனை படைத்த யாழ் இந்து மாணவன்

http://www.tamilwin.com/education/01/140676?ref=lankasri-home-dekstop

க.பொ.த சாதாரண தர பெறுபேற்றில் வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை

http://www.tamilwin.com/education/01/140686?ref=lankasri-home-dekstop

'படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது' அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி

http://www.tamilwin.com/education/01/140687?ref=lankasri-home-dekstop

யாழில் சாதனை படைத்த மாணவனின் எதிர்கால இலட்சியம் இதுதான்..

http://www.tamilwin.com/education/01/140692?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment