Thursday, March 23, 2017

பிரித்தானியாவில் குடியுரிமை கோருபவர்களின் கவனத்திற்கு

தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை கோருபவர்களுக்கு இடையில் குழப்பமான சூழ்நிலை இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோருபவர்கள் 10 வருடம் இருக்கவேண்டுமா அல்லது 6 வருடங்களுக்குப் பின்னர் (5 வருடங்கள் வதிவுரிமை அத்துடன் 12 மாதங்கள் நிரந்தர வதிவுரிமை) பிரித்தானியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா என்ற குழப்பம் பிரித்தானியாவில் பல தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இதற்கு விளக்கமளிக்கவேண்டும் எனில், நீங்கள் பின்வரும் விதத்தில் அகதி அந்தஸ்து கேரியவர்களைப் பிரிக்கவேண்டும்.
முதலாவது - அகதி அந்தஸ்து விண்ணப்பம் கோரி அவர்கள் உள்விவகார திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடியாக விசா வழங்கப்பட்டவர்கள்.
இரண்டாவது - அகதி அந்தஸ்து கோரிக்கை மறுக்கப்பட்டு, ஆனால் தொடர்ந்தும் உள்விவகார திணைக்களத்துடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர்களுடைய தற்காலிக வதிவிட முறைகளை(Temporary Admission) பின்பற்றியவர்கள்.
அதவது நீண்டகாலமாக கையொப்பமிட்டுக்கொண்டு வாழ்ந்தவர்கள். பின்னர் ஏதோ ஒரு வழியில் (Eg:- Legacy Programme) விசாவைப் பெற்றுக்கொண்டவர்கள்.
மூன்றாவது -அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு உள்விவாகர திணைக்களத்துடன், தொடர்பில் இல்லாமல் இருந்து பின்னர் உள்விவகார திணைக்களத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு ஏதாவது ஒரு முறை மூலம் விசாவைப் பெற்றுக்கொண்டவர்கள்.
பொதுவாகவே பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் Residence Requirements, ஆங்கில மொழி, Knowledge of life in the UK ஆகியவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.
அத்துடன், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒவ்வொரு தனிப்பட்ட விண்ணப்பங்களும் Annex – D Good Character Requirement இன் கீழ் அவர்களுடைய நடத்தைகளைக் கருத்திற்கொண்டே கணிப்பிடப்படுகின்றது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் Residence Requirements ஐயும் நன்நடத்தை விதிமுறைகளையும் (Good Character requirement) குழப்பிக்கொள்ளக் கூடாது.
நன் நடத்தை விதிமுறைகளின் கீழ் குற்றவியல் தண்டனைகள், சிறையிலடைக்கப்படாத குற்றவியல் நடவடிக்கைகள், மற்றய குற்றவியல் செயற்பாடுகள், நிதி விவகாரங்களில் ஆரோக்கியமாக இருத்தல், போர்க்குற்றங்கள், மோசடி மற்றும் நேர்மையின்மை, குடிவரவு தொடர்பான குற்றச் செயல்கள் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே குடியுரிமை விண்ணப்பங்கள் முடிவெடுக்கப்படுகின்றன.
9.5 of Annex – D Good Character Requirements இன்படி மேற்குறிப்பிட்ட அனைவரும் சட்டவிரோதமாக (நுழைவு அனுமதிப் பத்திரம் இல்லாமல்) நாட்டுக்குள் வந்திருந்தால், அவர்களுடைய குடியுரிமை விண்ணப்பங்கள் நாட்டுக்குள் வந்த திகதியிலிருந்து, அது உள்விவிவகார திணைக்களத்திற்குத் தெரியும் பட்சத்தில், 10 வருடங்களுக்குள் விண்ணப்பிக்கப்பட்டால் அது வழமையாக மறுக்கப்படும்.
இந்த திகதி உள்விவாகர திணைக்களத்திற்கு தெரியாதபட்சத்தில், அந்த குறிப்பிட்ட நபர் எப்பொழுது உள்விவகார திணைக்களத்தை தொடர்புகொண்டாரோ அந்தத் திகதியிலிருந்து 10 வருடங்களாகவே கணிக்கப்படும்.
ஆனால் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து அனுமதி வழங்கப்படும்பொழுது அவர்களுக்கு குடிவரவு மற்றும் தஞ்ச சட்டம் 1999ல் (Immigration and Asylum Act 1999) உள்ள வழங்குக் எதிரான பாதுகாப்புக்கள் (Defence) என்ற பிரிவின் கீழும், Article 31 of 1951 Geneva Convention Article 31 of 1951 Geneva Convention விதிமுறையின் கீழும் அவர்கள் மன்னிக்கப்பட்டு அல்லது பரிசீலிக்கப்பட்டே அவர்களுக்கு தஞ்சம், மற்றும் விசாக்கள் வழங்கப்படுகின்றன.
R V Asfaw 2008 எனும் வழக்குச் சட்டத்தில் இந்த விடயம் நீதிபதிகளால் தெளிவுபடுத்தப்படுகின்றது.
அத்துடன் இந்த வழக்கில், தஞ்சம் கேருபவர்களுக்கு நாட்டை விட்டு புறம்படும்போது, நாட்டிற்குள் வரும்போது, அல்லது நாட்டில் இருக்கும் பொழுது அனைவருக்கும் Article 31 of Geneva Convention சமனாக பாவிக்கப்படவேண்டும் என்பதை உள்விவகார திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அவ்வாறு மன்னிப்பு கொடுக்கப்பட்டு தஞ்ச அனுமதி வழங்கப்படும் பொழுது அவர்கள் 10 வருடங்கள் இருக்கவேண்டும் என்ற விதி எவ்வாறு பார்க்கப்படவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது.
ஒருவர் பிரித்தானியாவிற்குள் வந்த காலப்பகுதியிலிருந்து உள்விவகார அமைச்சுடன் தொடர்பிலிருந்து, அகதி அந்தஸ்த்துக்குப் பின்னர் நிரந்தர வதிவுரிமை விசாவுடன் (அல்லது குறுகியகால விசாவுடன் இருந்து பின்னர் நிரந்தர வதிவுரிமையைப் பெற்றிருந்தால்) 5 வருடங்கள் வாழ்ந்தால், அவர்களுக்கு அதன் பின்னர் ஒரு வருடத்தில் குடியுரிமை விண்ணப்பிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதலவாது வகையைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.
அவர்கள் 10 வருடங்கள் காத்திருந்து விண்ணப்பங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் உள்விவாகரத் திணைக்களத்துடன் தொடர்ச்சியாக 10 வருடங்கள் தொடர்பிலிருந்து அந்தக் காலப் பகுதிக்குள் குறைந்தது 5 வருடங்கள் வதிவுரிமையுடன் இருந்திருந்தால் அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இது தொடர்பாக முன்னாள் குடிவரவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் James Brokenshire கருத்துத் தெரிவிக்கையில், அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை விண்ணப்பங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்படமாட்டாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால், மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீண்டும் உள்விவாகார அமைச்சைத் தொடர்கொண்டதிலிருந்து 10 வருடங்கள் கழித்தே குடியுரிமை விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் முக்கியமான விடயம், அவர்கள் அந்தப் 10 வருடங்களில் குடியுரிமைக்கு விண்ணபிக்கும் பொழுது Residence Requirements ஐ பூர்த்தி செய்யவேண்டும்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படின் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும். நீங்கள் தமிழிலும் உரையாடலாம்.
JAY VISVA SOLICITORS
First Floor
784 Uxbridge Road
Middlesex
UB4 0RS
Tel: 020 8573 6673
http://news.lankasri.com/uk/03/121816?ref=lankasritop

No comments:

Post a Comment