தொலைக்காட்சி!!

Wednesday, March 15, 2017

எங்களுக்கும் காலம் வரும்…என பாடிய நடிகை இடத்தில் இந்த நடிகையா?

தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60 ஆண்டுகளில் சுண்டி இழுக்கும் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்றார்.மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்த் திரையுலகில் இரண்டே இரண்டு பேருக்குத் தான் இதுவரையில் நடிப்பின் திலகம் எனும் புகழாரம் கிடைத்துள்ளது. நடிகர்களில் சிவாஜி கணேசன். நடிகைகளில் சாவித்திரி. இருவருமே நடிப்பின் சிகரங்கள். நடிப்பின் உச்சத்தைத் தொட்டுப் பார்த்தவர்கள்.
நடிகையர் திலகம் சாவித்திரி. குண்டு முகம், வண்டுக் கண்கள், ஈரமான உதடுகள், நவரசங்களை விழியோரத்தில் நிறுத்திக் காட்டியவர். உதடுகளின் அசைவால் அனைவரையும் அசத்திப் போட்டவர்.
தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது. திரையுலகில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே’ என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன.
ஒரு காலத்தில் கார்கள், பங்களாக்கள், கணக்கிடமுடியாத நகைகள் என மகாராணியாய் வாழ்ந்த அந்த நடிகை துணை நடிகை போன்று நடித்தது திரையுலகை கண்ணீர் விடவைத்தது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு பிரமிப்பாகவும் ஆச்சர்யமாக இருந்ததால் சாவித்திரியின் புகழை கூற இயக்குனர் நாக் அஸ்வின், பிரபல நடிகையான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது, இதில் சாவித்திரியின் புகைப்படம் பின்னால் கீர்த்தி சுரேஷ் மற்றும், சமந்தா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
அதனால் இதில் யார் சாவித்திரி வேடத்தில் நடிப்பார்கள் என குழப்பம் நீடித்தது.
தற்போது இது குறித்து கூறியுள்ள படக்குழுவினர் நடிகை சமந்தா அந்த காலத்தில் சாவித்திரிக்கு போட்டியாக திகழ்ந்த ஜமுனா ராணியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதிலிருந்து, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால் பலர் இவர் சாவித்திரி வேடத்திற்கு செட் ஆவாரா என யோசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment