தொலைக்காட்சி!!

Thursday, March 16, 2017

கூலி தொழிலாளி மகன் இளம் கோடீஸ்வர தொழிலதிபரான கதை

முஸ்தபா நிறுவன தோசை, இட்லி பாக்கெட் மாவு என்றால் சென்னை, மும்பை, டெல்லி, துபாய் போன்ற இடங்களில் பிரசத்தி பெற்றது.
இதன் நிறுவனர் முஸ்தபா (42), இன்று மிகப்பெரிய தொழிலதிபர், அவர் கதையை அவரே சொல்கிறார்.
நான் இந்தியாவின் கேரளாவை சேர்ந்தவன், என் தந்தை 4வது மட்டுமே படித்த கூலி தொழிலாளி. என் தாய் பள்ளிக்கூடம் பக்கம் கூட செல்லாதவர்.
எனக்கும் சிறு வயது முதலே படிப்பு வரவில்லை. 6ஆம் வகுப்பில் பெயிலானேன். பின்னர் என் கணக்கு ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து கடுமையாக படித்து முதல் மாணவனாக வந்தேன்.
பத்தாம் வகுப்பிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பள்ளிப்படிப்புக்கு பின்னர் படிக்க எனக்கு வசதியில்லை. அரசு செலவில் இன்ஜினியரிங் பட்டபடிப்பில் சேர்ந்தேன்.
அதில் நன்றாக தேர்ச்சி பெற்ற எனக்கு மோடோரோலா நிறுவனத்தில் பெரிய வேலை கிடைத்தது.
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றேன், பின்னர் எனக்கு திருமணம் நடைப்பெற்றது.
பின்னர் இந்தியாவுக்கு வெளிநாட்டில் சம்பாதித்த 15 லட்சத்துடன் வந்தேன், எனக்கு அப்போது ஒரு விடயம் தோன்றியது.
வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் செய்வது தான் அது.
முதலில் அதிர்ச்சியடைந்த என் குடும்பத்தினர் பின்னர் சம்மதித்தார்கள், என் அத்தை மகன் எனக்கு ஒரு யோசனை சொன்னான். இட்லி, தோசை மாவுகளை பாக்கெட்டில் தயாரிக்கும் தொழில் யோசனை தான் அது.
25000 ரூபாய் முதலீடு போட்டு என் நான்கு உறவுக்கார ஆண்களை உடன் சேர்த்து கொண்டு தொழில் தொடங்கினேன்.
550 அடி கொண்ட சிறிய அறையில் இரண்டு கிரைண்டர்கள், ஒரு மிக்சியுடன் தொடங்கினோம்.
முதலில் எங்கள் ஏரியாவிலுள்ள கடைகளுக்கு மாவு பேக்கெட்களை விநியோகித்தோம். பின்னர் மக்கள் அதன் சுவையால் அதிகம் வாங்க எங்கள் வியாபாரம் சூடு பிடித்தது.
முதலில் ஒரு நாளைக்கு நூறு பாக்கெட் மாவுகள் தயாரித்தோம். ஆரம்பத்தில் 25000 போட்ட தொழிலில் தற்போது 4 கோடி முதலீடு செய்துள்ளேன்.
50000 கிலோ மாவு தற்போது தயாரிக்கிறோம். 100 கோடி லாபம் வருகிறது. தற்போது 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
இன்னும் சில வருடங்களில் 1000 கோடி வியாபாரத்துடன் 5000 ஊழியர்களை பணியில் அமர்த்துவதே எங்கள் இலக்கு என கூறுகிறார்.

No comments:

Post a Comment