தொலைக்காட்சி!!

Wednesday, March 29, 2017

கிரெடிட் கார்ட் பாவிப்பவர்களா... கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை

கிரெடிட் கார்டு இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது.

ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

எனவே, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சிலவற்றை இங்கு பார்ப்போம்....

# கிரெடிட் கார்டில் அளவுக்கு மீறி செலவு செய்ய கூடாது. அதாவது, சேமிப்பில் இல்லாத அளவு தொகையைத் தாண்டி செலவு செய்யத்தான் கிரெடிட் கார்டு. ஆனால், தேவைக்கேற்ப திரும்பக் கட்ட முடிகின்ற அளவுக்கான பணத்தை மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

# கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ததற்கான பில்லை அதன் கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லை எனில், சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்படக்கூடும்.

# தவணைத் தேதி மற்றும் வட்டியில்லாக் காலம் எப்போது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கிரெடிட் கார்டுகளுக்கான வட்டியில்லாக் காலம் என்பது பணம் செலுத்தும் நாள், பொருள் வாங்கிய தேதி ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.

# கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியை தேவையில்லாமல் பயன்படுத்த கூடாது. இதனால் வட்டியில்லாக் காலமும் பாதிப்படையும்.

# கிரெடிட் கார்டில் பணம் எடுத்த அடுத்த நொடியில் இருந்தே வட்டி கணக்கிடப்படுவது துவங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

# ஒரே கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கித் தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

# Impulse Purchaseகளை தவிர்க்க வேண்டும். ஏதாவது பெரிய Purchase செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். Purchase Impulse ஆக அதிகரிக்க கூடாது.

# பல Offerகளை Online நிறுவனங்கள் அளிக்கும். அதனை கணக்கில் எடுத்துக்கொண்டு Purchase அள‌வைக் கூட்ட கூடாது.

# கிரெடிட் கார்டுகளை சரியான செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தினசரி செலவுகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

# கிரெடிட் கார்டுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளை கட்டாயம் படிக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லா சிக்கலை சந்திக்க நேரிடும்.
28 Mar 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1490717847&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment