தொலைக்காட்சி!!

Saturday, March 11, 2017

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கோர விபத்தில் பலி


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம் புளியங்கூடலை நோக்கிப் சென்று கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக மண்கும்பான் எல்லையில் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள், கார், உழவு இயந்திரம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த சர்மிளா விஜயரூபன் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தள்ளார்.
கனடாவில் வசித்து வரும் திருமதி சர்மிளா விஜயரூபன், தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக, இரு பிள்ளைகளுடன் தாயகம் வந்திருந்தார்.
உயிரிழந்த சர்மிளா, யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டம் பெற்று, லண்டனில் உயர் கல்வி கற்றுள்ளார். பின்னர் குடும்பத்துடன் கனடா சென்று அங்கு குடியுரிமை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment